'லியோ'வை அடுத்து 'மாமன்னன்' படத்தின் ரிலீஸ் உரிமையை பெற்ற பிரபல நிறுவனம்..!

  • IndiaGlitz, [Monday,June 19 2023]

தளபதி விஜய் நடித்த ’லியோ’ படத்தின் பிரிட்டன் மற்றும் ஐரோப்பிய நாடுகளின் ரிலீஸ் உரிமையை பெற்ற நிறுவனம் தற்போது உதயநிதி ஸ்டாலின் நடித்த ‘மாமன்னன்’ திரைப்படத்தின் ரிலீஸ் உரிமையையும் பெற்றுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பிரபல நிறுவனமான அஹிம்சா என்டர்டைன்மென்ட் என்ற நிறுவனம் தமிழ் திரையுலகின் பிரபல நட்சத்திரங்களின் படங்களை வெளிநாட்டில் உள்ள பல நாடுகளில் ரிலீஸ் செய்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம்.

அந்த வகையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவான ’லியோ ’படத்தின் பிரிட்டன் மற்றும் ஐரோப்பிய நாடுகள் என்று ரிலீஸ் உரிமையை பெற்றது. இதற்கு நன்றி தெரிவித்து சமீபத்தில் இந்நிறுவனம் வீடியோ ஒன்றை வெளியிட்டு இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் லியோவை அடுத்து உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவான ‘மாமன்னன்’ திரைப்படத்தின் பிரிட்டன் மற்றும் ஐரோப்பிய நாடுகளின் ரிலீஸ் உரிமையை இதே அஹிம்சா நிறுவனம் பெற்றுள்ளது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு சற்றுமுன் இணையதளங்களில் வெளியாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஜூன் 29ஆம் தேதி உலகம் முழுவதும் ரிலீஸ் ஆக உள்ள ‘மாமன்னன்’ படத்தில் உதயநிதி ஸ்டாலின், கீர்த்தி சுரேஷ், பகத் பாசில், வடிவேலு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ரெட் ஜெயண்ட் மூவீஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்திற்கு ஏஆர் ரகுமான் இசையமைத்துள்ளார்.