குஷ்புவை அடுத்து காங்கிரஸில் இருந்து பாஜகவுக்கு தாவும் தமிழ் நடிகை?
Send us your feedback to audioarticles@vaarta.com
நடிகை குஷ்பு காங்கிரஸ் கட்சியில் இருந்து கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் பாஜகவுக்கு தாவினார் என்பதும் அதன் பிறகு அவருக்கு சென்னை ஆயிரம் விளக்கு சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டது என்பதும் தெரிந்ததே.
இந்த நிலையில் காங்கிரஸ் கட்சியில் உள்ள மற்றொரு பிரபல தமிழ் நடிகை பாஜகவுக்கு தாவவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ’பாட்ஷா’ உட்பட பல வெற்றிப் படங்களில் நடித்தவர் நடிகை நக்மா. இவர் கடந்த 18 ஆண்டுகளாக காங்கிரஸ் கட்சியில் இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் சமீபத்தில் காங்கிரஸ் கட்சியின் மாநிலங்களவை வேட்பாளர் பட்டியல் வெளியிட்ட போது அதில் தனது பெயர் இல்லாததை கண்டு நக்மா அதிருப்தி அடைந்தார். இதுகுறித்து அவர் தனது டுவிட்டரில் கூறியபோது ’காங்கிரஸ் கட்சியில் இணைந்த போது மாநிலங்களவை உறுப்பினர் வாய்ப்பு தரப்படும் என சோனியா காந்தி உறுதி அளித்திருந்தார். ஆனால் 18 ஆண்டுகள் ஆகியும் அவரது உறுதிமொழியை காப்பாற்றப்படவில்லை என்றும், மாநிலங்களவை உறுப்பினர் ஆவதற்கு எனக்கு தகுதி இல்லையா? என்றும் கேள்வி எழுப்பியிருந்தார்.
இந்த நிலையில் காங்கிரஸ் கட்சியில் அதிருப்தியில் இருக்கும் நக்மாவை பாஜகவில் சேர தூது விடப்பட்டு வருவதாகவும், விரைவில் அவர் பாஜகவில் சேர அதிக வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com