மைக் மோகனின் 'ஹரா': குஷ்புவை அடுத்து இணைந்த பிக்பாஸ் நடிகை..!
Send us your feedback to audioarticles@vaarta.com
சில்வர் ஜூப்ளி ஸ்டார் நடிகர் மோகன் கடந்த 80 களில் தொடர்ச்சியாக பல வெள்ளிவிழா திரைப்படங்களை கொடுத்தவர் என்பது தெரிந்ததே. நீண்ட இடைவேளைக்கு பிறகு தற்போது மோகன் நடித்து வரும் ’ஹரா’ என்ற திரைப்படத்தில் ஏற்கனவே குஷ்பு முக்கிய இடத்தில் நடித்து வரும் நிலையில் தற்போது பிக் பாஸ் நடிகை ஒருவரும் இணைந்துள்ளதாக புகைப்படத்துடன் கூடிய தகவல் வெளியாகியுள்ளது.
நடிகர் மோகன் நீண்ட இடைவேளைக்கு பிறகு நடித்து வரும் திரைப்படம் ’ஹரா’. இந்த படத்தில் குஷ்பு, யோகி பாபு, சாருஹாசன், மனோபாலா, மொட்ட ராஜேந்திரன் உள்பட பல நடித்துள்ளனர். விஜய் ஸ்ரீ இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட நிறைவடைய உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் இந்த படத்தில் தற்போது பிக் பாஸ் போட்டியாளர்களில் ஒருவரும் நடிகையுமான வனிதா விஜயகுமார் இணைந்துள்ளார். நடிகர் மோகன் உடன் இணைந்து இருக்கும் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள வனிதா விஜயகுமார் ’நான் மோகனின் மிகப்பெரிய ரசிகை என்றும் அவருடன் இணைந்து நடிக்க வேண்டும் என்ற பல நாள் கனவு தற்போது நிறைவேறி உள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.
நடிகர் மோகன் இந்த படத்தில் ஜொமோட்டோ ஊழியர் ஆக நடித்து வருகிறார் என்பது இந்த புகைப்படத்தின் மூலம் தெரிய வந்துள்ளது.
Dreams do come true with one of our favourite actors evergreen favourite #actormohan @ActorMohan #haraa #fangirlmoment pic.twitter.com/akkzFd8bFS
— Vanitha Vijaykumar (@vanithavijayku1) July 1, 2023
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com