close
Choose your channels

குஷ்புவை அடுத்து கவர்ச்சி நடிகைக்கு கட்டப்பட்ட கோவில்: வெறித்தனமான ரசிகர்!

Monday, August 29, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழ் திரை உலகில் பல ஆண்டுகளுக்கு முன்னர் நடிகை குஷ்புவுக்கு மதுரையில் கோவில் கட்டப்பட்ட நிலையில் கவர்ச்சி நடிகை ஒருவருக்கு அவரது வெறித்தனமான ரசிகர் ஒருவர் கோவில் கட்டி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன.

கடந்த 2007ஆம் ஆண்டு ’முதல் கனவே’ என்ற திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் நடிகை ஹனிரோஸ். அதன் பின்னர் சிங்கம் புலி, மல்லுக்கட்டு, கந்தர்வன் உள்ளிட்ட தமிழ் படங்களிலும் ஏராளமான மலையாள படங்களிலும் நடித்துள்ளார்.

இந்த நிலையில் கேரளாவில் உள்ள ரசிகர் ஒருவர் நடிகை ஹனிரோஸ்-க்கு கோவில் கட்டி இருப்பதாக தெரிகிறது. இது மலையாள சேனல் ஒன்றுக்கு பேட்டியளித்த நடிகை ஹனிரோஸ், ‘தான் நடித்த முதல் படத்திலிருந்தே பாண்டி என்ற ரசிகர் தன்னுடன் போனில் பேசி வருவதாகவும் தன்னுடைய படங்கள் ரிலீசாகும் போதெல்லாம் தனக்கு பாராட்டு தெரிவிப்பார் என்று கூறினார்.

அந்த ரசிகர் தான் எனக்கு கோவில் கட்டியுள்ளார் என்றும் என் பிறந்தநாளுக்கு அவர் ரசிகர்களுக்கு பாயாசம் வழங்கி வருவதாகவும் இத்தனை வருடமாக ரசிகர் ஒருவர் என்னை தொடர்ந்து பாராட்டி வருவது தனக்கு ஆச்சரியமாக இருப்பதாகவும் ஹனிரோஸ் அந்த பேட்டியில் கூறியுள்ளார். ஆனால் அதே நேரத்தில் அந்த ரசிகர் ஹனிரோஸ்-க்கு எந்த இடத்தில் கோவில் கட்டி உள்ளார் என்பதை அவர் தெரிவிக்கவில்லை.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment