குஷ்புவை அடுத்து கவர்ச்சி நடிகைக்கு கட்டப்பட்ட கோவில்: வெறித்தனமான ரசிகர்!

  • IndiaGlitz, [Monday,August 29 2022]

தமிழ் திரை உலகில் பல ஆண்டுகளுக்கு முன்னர் நடிகை குஷ்புவுக்கு மதுரையில் கோவில் கட்டப்பட்ட நிலையில் கவர்ச்சி நடிகை ஒருவருக்கு அவரது வெறித்தனமான ரசிகர் ஒருவர் கோவில் கட்டி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன.

கடந்த 2007ஆம் ஆண்டு ’முதல் கனவே’ என்ற திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் நடிகை ஹனிரோஸ். அதன் பின்னர் சிங்கம் புலி, மல்லுக்கட்டு, கந்தர்வன் உள்ளிட்ட தமிழ் படங்களிலும் ஏராளமான மலையாள படங்களிலும் நடித்துள்ளார்.

இந்த நிலையில் கேரளாவில் உள்ள ரசிகர் ஒருவர் நடிகை ஹனிரோஸ்-க்கு கோவில் கட்டி இருப்பதாக தெரிகிறது. இது மலையாள சேனல் ஒன்றுக்கு பேட்டியளித்த நடிகை ஹனிரோஸ், ‘தான் நடித்த முதல் படத்திலிருந்தே பாண்டி என்ற ரசிகர் தன்னுடன் போனில் பேசி வருவதாகவும் தன்னுடைய படங்கள் ரிலீசாகும் போதெல்லாம் தனக்கு பாராட்டு தெரிவிப்பார் என்று கூறினார்.

அந்த ரசிகர் தான் எனக்கு கோவில் கட்டியுள்ளார் என்றும் என் பிறந்தநாளுக்கு அவர் ரசிகர்களுக்கு பாயாசம் வழங்கி வருவதாகவும் இத்தனை வருடமாக ரசிகர் ஒருவர் என்னை தொடர்ந்து பாராட்டி வருவது தனக்கு ஆச்சரியமாக இருப்பதாகவும் ஹனிரோஸ் அந்த பேட்டியில் கூறியுள்ளார். ஆனால் அதே நேரத்தில் அந்த ரசிகர் ஹனிரோஸ்-க்கு எந்த இடத்தில் கோவில் கட்டி உள்ளார் என்பதை அவர் தெரிவிக்கவில்லை.

More News

ஜெயம் ரவியின் அடுத்த படம், நாயகி இயக்குனர் அறிவிப்பு: வைரலாகும் மோஷன் போஸ்டர்!

 தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான ஜெயம் ரவி நடிக்க இருக்கும் அடுத்த திரைப்படம் குறித்த மோஷன் போஸ்டர் வெளியாகி உள்ள நிலையில் இந்த படத்தின் டைட்டில், நாயகி மற்றும் இயக்குனர்

இயக்குனராகும் 'திருச்சிற்றம்பலம்' பட நடிகை: முதல் பட ஹீரோ யார்?

 தனுஷ் நடித்த 'திருச்சிற்றம்பலம்' திரைப்படத்தில் நடித்த நடிகை ஒருவர் விரைவில் இயக்குனராக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ரூ.100 கோடியில் இருந்து ரூ.20 கோடி: திடீரென சம்பளத்தை குறைத்த ஷங்கர் பட நடிகர்!

பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் படத்தில் நடித்த நடிகர் திடீரென தனது சம்பளத்தை 100 கோடியில் இருந்து 80 கோடி ரூபாய் குறைத்து 20 கோடி ரூபாய் என மாற்றியிருப்பது திரையுலக வட்டாரத்தில்

'தளபதி 67' ஒரு LCU படமா? அவரே கூறிய மாஸ் தகவல்!

தளபதி விஜய் நடிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாக இருக்கும் 'தளபதி 67' படத்தின் படப்பிடிப்பு இன்னும் தொடங்காத நிலையில் இந்த படம் குறித்த தகவல்கள் தினந்தோறும் கசிந்து வருகின்றன

அஜித் - விக்னேஷ் சிவனின் 'ஏகே 62' படப்பிடிப்பு தொடங்குவது எப்போது? மாஸ் தகவல்!

அஜித் தற்போது எச் வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் 'ஏகே 61' என்ற படத்தில் நடித்து வருகிறார் என்பதும் இந்த படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பது தெரிந்ததே.