'குந்தவை'க்கு பின் த்ரிஷாவின் அதிரடி ஆக்சன் அவதாரம்: வீடியோ ரிலீஸ்

  • IndiaGlitz, [Monday,October 24 2022]

சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படத்தில் குந்தவை என்ற கேரக்டரில் நடிகை த்ரிஷா நடித்து இருந்தார் என்பதும் அழகும் அறிவும் ஒருங்கே அமைந்த இந்த கேரக்டரில் அவர் மிகப் பொருத்தமாக இருந்தார் என்று விமர்சனங்கள் குவிந்தன என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் குந்தவை கேரக்டரை அடுத்து அவர் நடித்து வரும் ’தி ரோடு’ என்ற திரைப்படத்தில் அதிரடி ஆக்ஷன் கேரக்டரை கையில் எடுத்துள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தின் தீபாவளி சிறப்பு வீடியோ வெளியாகியுள்ளது. இந்த வீடியோவில் இந்த படத்தின் டீஸர் மிக விரைவில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2000ம் ஆண்டு மதுரையில் நடந்த உண்மை கதையை அடிப்படையில் உருவாகி வரும் இந்தப் படத்தில் த்ரிஷா உடன் சந்தோஷ் பிரதாப், சபீர், மியா ஜார்ஜ், எம்எஸ் பாஸ்கர் உள்பட பலர் நடிக்கின்றனர். அருண் வசீகரன் இயக்கத்தில் உருவாகும் இந்த படத்திற்கு சாம் சிஎஸ் இசையமைக்கிறார். இந்த படத்திற்கு கேஜி வெங்கடேஷ் ஒளிப்பதிவும், நாகூரான் படத்தொகுப்பு பணியும் செய்கின்றனர்.


 

More News

பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறியவுடன் ஜிபி முத்து வெளியிட்ட முதல் வீடியோ: என்ன சொல்லியிருக்கார்?

 பிக் பாஸ் நிகழ்ச்சியின் போட்டியாளர்களில் ஒருவரான ஜிபி முத்து மிகச் சிறப்பாக விளையாடி கொண்டிருந்தார் என்பதும் அவரது பெயரில் ஆர்மிகள் ஆரம்பிக்கப்பட்டு அவருக்கு மிகச்சிறந்த ஆதரவை

13 ஆண்டுகளுக்கு பின் பிகினி உடையில் அனுஷ்கா ஷெட்டி: திரையரங்கில் ரசிகர்கள் கொண்டாட்டம்!

 திரையரங்கில் அனுஷ்கா ஷெட்டியை பிகினி உடையில் பார்த்த ரசிகர்கள் கரகோஷம் எழுப்பி கொண்டாடிய வீடியோ தற்போது இணையதளங்களில் வைரலாக வருகிறது. 

இந்தியன் பனோரமாவில்  தேர்வான தமிழ்திரைப்படம்: குவியும் வாழ்த்துக்கள்!

உலகம் முழுக்க  புகழ்பெற்ற திரைப்பட விழாவாக  80 வருடங்களாக நடந்து வரும் கோவா  சர்வதேச திரைப்படவிழாவில் இந்தியன்  பனோராமா பிரிவில், ஜெய் பீம் படத்துடன் “கிடா” எனும் தமிழ் படமும்

யோகிபாபு வீட்டுக்கு வந்த தேவதை: திரையுலகினர், ரசிகர்கள் வாழ்த்து!

 பிரபல காமெடி நடிகர் யோகிபாபுவுக்கு ஏற்கனவே ஆண் குழந்தை பிறந்த நிலையில் இன்று பெண் குழந்தை பிறந்துள்ளதை அடுத்து அவருக்கு திரையுலகினர் ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். 

ரசிகர்களுக்கு தீபாவளி வாழ்த்து கூறிய ரஜினி-கமல்: வீடியோ வைரல்!

இந்தியாவில் உள்ளவர்கள் மட்டுமின்றி உலகம் முழுவதும் உள்ள இந்தியர்கள் இன்று தீபாவளி பண்டிகையை சிறப்பாக கொண்டாடி வருகின்றனர். கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா வைரஸ் பாதிப்பு