close
Choose your channels

கீர்த்தி சுரேஷை அடுத்து தமன்னா.. திருமணத்திற்கு செய்யும் முன்னேற்பாடுகள்..!

Friday, November 22, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவரான கீர்த்தி சுரேஷின் திருமணம் குறித்து தகவல் இணையத்தில் கசிந்து பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அடுத்ததாக தமன்னாவின் திருமண தகவல் கசிந்து, ரசிகர்கள் மத்தியில் பெரும் ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது.

நடிகை கீர்த்தி சுரேஷ் தனது நீண்டகால நண்பர் அந்தோணி என்பவரை திருமணம் செய்யப் போவதாகவும், இந்த திருமணம் அடுத்த ஆண்டில் நடைபெறும் எனவும் கூறப்படுகிறது.

இந்நிலையில், நடிகை தமன்னா கடந்த சில ஆண்டுகளாக நடிகர் விஜய் வர்மாவை காதலித்து வருவதுடன், இருவரும் அடுத்த ஆண்டு திருமணம் செய்து கொள்ள திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. திருமணத்திற்கான முன்னேற்பாடுகள் தற்போது நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.

குறிப்பாக, திருமணத்திற்குப் பின்னர் வாழ்வதற்காக ஆடம்பரமான ஒரு அபார்ட்மெண்ட் வாங்கும் முயற்சியில் இருவரும் இணைந்து உள்ளதாகவும், அதற்கான பணிகள் நடைபெற்று வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தமன்னா மற்றும் விஜய் வர்மாவின் திருமணம் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகாத போதிலும், இந்த திருமணம் 2025 ஆம் ஆண்டில் நடைபெறும் என திரையுலக வட்டாரங்கள் உறுதிப்படுத்துகின்றன.

நடிகை தமன்னா தற்போது ஒரு தெலுங்கு படம் மற்றும் ஒரு ஹிந்தி படத்தில் நடித்து வருகிறார். இந்த இரண்டு படங்களையும் முடித்த பிறகு அவர் திருமணத்திற்கு தயாராக இருப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment