தலைவர் 168: கீர்த்திசுரேஷ், மீனாவை அடுத்து மேலும் ஒரு பிரபல நடிகை

  • IndiaGlitz, [Tuesday,December 10 2019]

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கவிருக்கும் 'தலைவர் 168’ படத்தின் அறிவிப்புகள் ஒவ்வொன்றும் ஆச்சரியத்தை அளித்து வருகிறது. முதலில் இந்த படத்தில் கீர்த்தி சுரேஷ் நடிக்கவிருப்பதாக நேற்று அறிவிக்கப்பட்ட ஒரு சில மணி நேரங்களில் பிரகாஷ்ராஜ் இந்த படத்தில் இணைந்து உள்ளதாகவும் அறிவிப்பு வந்தது.

இந்த நிலையில் இன்று காலை ’தலைவர் 168’ படத்தில் முக்கிய வேடத்தில் மீனா நடிப்பதாக அறிவிக்கப்பட்ட நிலையில் சற்று முன் இந்த படத்தில் குஷ்புவும் ஒரு முக்கிய கேரக்டரில் நடிக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனை அடுத்து ரஜினிக்கு இந்த படத்தில் இரண்டு ஜோடிகளா? அல்லது ‘படையப்பா’ போன்று ஒருவர் நெகட்டிவ் கேரக்டரில் நடிக்கவுள்ளாரா? போன்ற பல்வேறு யூகங்களை இந்த அறிவிப்பு ஏற்படுத்தி உள்ளது.

மொத்தத்தில் இந்த படத்தில் கீர்த்தி சுரேஷ், மீனா,குஷ்பு, பிரகாஷ்ராஜ், சூரி என இந்த படத்தில் நட்சத்திரக் கூட்டமே இருக்கும் என்பதால் இந்த படத்தின் எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது. சிறுத்தை சிவா இயக்கத்தில் இமான் இசையில் சன்பிக்சர்ஸ் பிரமாண்டமாக தயாரிக்க உள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது என்பதும் இந்தப் படம் அடுத்த ஆண்டு தீபாவளிக்கு வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
 

More News

"எந்த மசோதாவும் மேற்கு வங்கத்திற்குள் நுழையாது" - முதல்வர் மம்தா பானர்ஜி.

மேற்குவங்கத்தில் குடியுரிமை சட்ட திருத்த மசோதாவை அமல்படுத்த ஒருபோதும் அனுமதிக்கமாட்டோம்

ஓடும் பேருந்திலேயே தாலி கட்டிய இளைஞர்.. வாணியம்பாடியில் ஒரு ஒருதலைக் காதல்

இதை எதிர்பார்க்காத அந்தப் பெண் அதிர்ச்சியடைந்து தாலிக் கயிற்றைக் கழுத்திலிருந்து வெளியே எடுத்தார். இதனால் மேலும் ஆத்திரமடைந்த ஜெகன்,

அம்மனை அடுத்து முருகனை தரிசித்த நட்சத்திர காதல் ஜோடி!

தமிழ் சினிமாவின் நட்சத்திர காதல் ஜோடிகளில் ஒன்றான இயக்குனர் விக்னேஷ் சிவன் மற்றும் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா ஆகிய இருவரும் இன்று காலை கன்னியாகுமரியில்

இதுதான் 'தளபதி'யின் பவர்: அர்ச்சனா கல்பாதி டுவீட்

தளபதி விஜய் நடித்த பிகில் திரைப்படம் கடந்த தீபாவளி அன்று வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பது தெரிந்ததே. இந்த படத்தை தயாரித்த அர்ச்சனா கல்பாதி இந்த

பாலியல் குற்றவாளிகளிக்கு 3 வாரங்களில் தூக்கு அல்லது என்கவுண்டர்: முதல்வர் அதிரடி அறிவிப்பு

பெண்கள் மீதான பாலியல் குற்றங்களில் ஈடுபடுபவர்களுக்கு தண்டனை கிடைக்க வருடக்கணக்கில் ஆவதால் தான் என்கவுண்டரில் முறைகளை மக்கள் ஆதரித்து வருவதாக கூறப்படுகிறது