கமல்ஹாசனை அடுத்து பொன்னம்பலத்திற்கு உதவி ரஜினிகாந்த்

பிரபல வில்லன் நடிகரும் பிக்பாஸ் போட்டியாளர்களில் ஒருவருமான பொன்னம்பலம் சிறுநீரக கோளாறு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வருகிறார் என்ற செய்தியை ஏற்கனவே பார்த்தோம்.

மேலும் நடிகர் பொன்னம்பலம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட செய்தி அறிந்ததும் கமலஹாசன் அவருடைய சிகிச்சைக்கு உதவி செய்துள்ளார் என்றும் அதுமட்டுமின்றி அவருடைய இரண்டு குழந்தைகளின் படிப்புச் செலவையும் கமலஹாசன் ஏற்றுக் கொண்டுள்ளதாகவும் பொன்னம்பலம் தரப்பினர் தெரிவித்த செய்தியையும் பார்த்தோம்.

இந்த நிலையில் தற்போது கமல்ஹாசனை அடுத்து ரஜினிகாந்தும் பொன்னம்பலத்திற்கு உதவி செய்துள்ளார். இதுகுறித்து பொன்னம்பலம் கூறியபோது, ‘எனது இரண்டு சிறுநீரகங்களும் செயலிழந்துவிட்டது. இதற்காக சிகிச்சை பெற்று வருகிறேன். என் மகன், மகள் படிப்பு செலவை கமல் சார் ஏற்றுக்கொண்டார். எனது சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செலவை ரஜினி சார் ஏற்றுக்கொண்டார் என்று தெரிவித்துள்ளார்.

சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் நடிகர் பொன்னம்பலம், ‘முத்து’, ‘அருணாச்சலம்’ போன்ற படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.