கமல், ரஜினியை அடுத்து அரசியலில் குதிக்கும் பிரபல இயக்குனர்

  • IndiaGlitz, [Monday,January 08 2018]

கோலிவுட் திரையுலகில் இருந்து கமல், ரஜினி, விஷால், ராகவா லாரன்ஸ் ஆகியோர் அரசியலில் குதிக்கவுள்ள நிலையில் தற்போது இந்த பட்டியலில் கே.பாக்யராஜ் அவர்களும் இணையவுள்ளார்.

முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் மறைவிற்கு பின்னர் அரசியல் களத்தில் குதித்த இயக்குனர் கே.பாக்யராஜ் எம்ஜிஆரின் மனைவி ஜானகி அணியை ஆதரித்தார். பின்னர், அவரே தனிக்கட்சி தொடங்கினார். ஒருசில ஆண்டுகளில் கட்சியை கலைத்துவிட்டு திமுகவில் இணைந்தார். கடந்த சில ஆண்டுகளாக அரசியலில் இருந்து ஒதுங்கியிருக்கும் பாக்யராஜ் மீண்டும் தீவிர அரசியலில் குதிக்கவுள்ளதாக தெரிவித்துள்ளார்

மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த பாக்யராஜ் கூறியதாவது: அரசியலுக்கு நேரடியாக வரக்கூடிய வாய்ப்பும் காலமும் நெருங்கிவிட்டது. அந்தச் சூழல் எப்போது வேண்டுமானாலும் வரலாம். ஆனால் இப்போதைக்கு எதுவும் சொல்லமுடியாது. அதற்குக் கொஞ்சம் அவகாசம் தேவை.

கிட்டத்தட்ட, நேரடி அரசியல் குறித்து முடிவு எடுக்கும் வாய்ப்பு வந்துவிட்டது என்றே நினைக்கிறேன். அதற்கான காலம், நீண்டகாலம் என்றெல்லாம் நினைக்கவேண்டாம். இன்னும் ஒருமாதத்திற்குள் முடிவைச் சொல்லுவேன்.  யாருக்கு ஆதரவு, ஏன் ஆதரவு என்றெல்லாம் அப்போது தெரியும். கொஞ்சம் பொறுத்திருங்கள்

ரஜினி, கமல் ஆகிய இருவரும் அரசியலுக்கு வருவது அவர்களது உரிமை என்று கூறிய கே.பாக்யராஜ், இருவரையும் ஆதரிப்பது மக்களின் கையில் தான் உள்ளது என்று கூறினார்.

More News

சூர்யா-பவன்கல்யாண் ரசிகர்களுக்கு ஏற்பட்ட திடீர் அதிருப்தி

ஒரு திரைப்படம் வியாபாரம் பேசும்போது தயாரிப்பாளரும் விநியோகிஸ்தரும் பேசி ஒரு தொகையை முடிவு செய்வார்கள். அந்த தொகையில் கருத்துவேறுபாடு இருந்தால் தயாரிப்பாளரே நேரடியாக திரையரங்குகளில் வெளியிடுவார்கள்

ரஜினி, கமல் அரசியல் குறித்து கவிஞர் வைரமுத்து கூறியது என்ன?

கோலிவுட் திரையுலகில் இருந்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், உலகநாயகன் கமல்ஹாசன் ஆகிய இருவரும் அரசியலுக்கு வருவது உறுதி செய்யப்பட்டுவிட்டது.

விக்ரமின் 'சாமி 2' படத்தில் மீண்டும் த்ரிஷா?

விக்ரம், த்ரிஷா நடிப்பில் இயக்குனர் ஹரி இயக்கிய 'சாமி' திரைப்படம் கடந்த 2003ஆம் ஆண்டு வெளிவந்து சூப்பர் ஹிட் ஆகிய நிலையில் 15 ஆண்டுகள் கழித்து தற்போது இந்த படத்தின் இரண்டாம் பாகம் தயாராகி வருகிறது.

பெங்களூர் மதுபார் விடுதியில் தீவிபத்து: பெண் உள்பட 5 பேர் பலி

பெங்களூரில் இயங்கி வந்த மதுபான விடுதியில் அதிகாலை நேரத்தில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக விடுதியில் தூங்கிக்கொண்டிருந்த ஐந்து பேர் உடல்கருகி பரிதாபமாக மரணம் அடைந்தனர்.

எனது டுவிட்டர் கருத்துக்கள் புரியாமல் இருப்பதும் நல்லதுதான்: கமல்ஹாசன்

உலக நாயகன் கமல்ஹாசன் கடந்த சில மாதங்களாக டுவிட்டரில் ஆளும் அரசின் மீது விமர்சனங்களும், சமூக அவலங்களை எடுத்துரைக்கும் கருத்துக்களையும் தெரிவித்து வருகிறார்.