கமல்ஹாசனை அடுத்து வில்லனாகும் சிம்பு.. யாருடைய படத்தில் தெரியுமா?

  • IndiaGlitz, [Tuesday,June 27 2023]

உலகநாயகன் கமல்ஹாசன், பிரபாஸ் நடிக்க இருக்கும் ’புராஜெக்ட் கே’ என்ற திரைப்படத்தில் வில்லனாக நடிக்க உள்ளார் என்றும் இது குறித்து அறிவிப்பு சமீபத்தில் வெளியானது என்பதையும் பார்த்தோம். மேலும் இந்த படத்தில் அவருக்கு வில்லனாக நடிக்க மிகப்பெரிய தொகையை சம்பளமாக கொடுக்கப்பட்டதாகவும் இந்த சம்பளம் இதுவரை எந்த தமிழ் நடிகரும் வாங்காத சம்பளம் என்றும் கூறப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் கமல்ஹாசனை அடுத்து சிம்புவும் முன்னணி நடிகரின் படத்தில் வில்லனாக நடிக்க இருப்பதாக வெளிவந்திருக்கும் தகவல் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது

கமல்ஹாசன் மற்றும் மணிரத்னம் இணையும் திரைப்படத்தின் அறிவிப்பு சமீபத்தில் வெளியான நிலையில் இந்த படத்தின் திரைக்கதையை மணிரத்னம் எழுதி முடித்து விட்டதாகவும் விரைவில் படப்பிடிப்பு தொடங்கும் என்றும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் இந்த படத்தில் வில்லனாக நடிக்க சிம்புவிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாகவும் இந்த தகவல் உறுதி செய்யப்பட்டால் இந்த படம் தமிழ் உலகில் மிகப்பெரிய அளவில் பேசப்படும் படமாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது. அந்த முன்னணி நடிகர் வேறு யாருமில்லை, உலக நாயகன் கமல்ஹாசன் தான்.

ஏற்கனவே கமல்ஹாசன் தயாரிப்பில் சிம்புவின் 50வது திரைப்படத்தை மணிரத்னம் இயக்க இருப்பதாக செய்திகள் வெளியான நிலையில் தற்போது ’கமல் 234’ படத்தில் மணிரத்னம் இயக்கத்தில் சிம்பு வில்லனாக நடிக்க உள்ளார் என்ற தகவல் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.

மணிரத்னம் இயக்கத்தில் உருவான ’செக்கச்சிவந்த வானம்’ என்ற திரைப்படத்தில் ஏற்கனவே சிம்பு ஒரு முக்கிய கேரக்டரில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.,