close
Choose your channels

கமல்ஹாசனை அடுத்து தைவானில் ஷங்கர்.. மாஸ் புகைப்படம் வைரல்..!

Sunday, April 2, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில், பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் ’இந்தியன் 2’. இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வரும் நிலையில் தற்போது அடுத்த கட்டமாக இந்த படத்தின் படப்பிடிப்பு தைவானில் நடைபெற இருப்பதாக தகவல் வெளியானது. ஏற்கனவே கமல்ஹாசன் தைவான் சென்றுவிட்டதாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படத்துடன் ஒரு பதிவு செய்திருந்தார் என்பதும் அந்த பதிவு வைரலானது என்பதையும் பார்த்தோம்.

இந்த நிலையில் சற்றுமுன் இயக்குனர் ஷங்கர் தைவான் நாட்டிற்கு சென்றுள்ளார். தைவானில் உள்ள முக்கிய பகுதியில் அவர் நின்று கொண்டிருக்கும் புகைப்படத்தை தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ள நிலையில் அந்த புகைப்படம் வைரல் ஆகி வருகிறது.

தைவானில் ‘இந்தியன் 2’ படத்தின் படப்பிடிப்பு 8 நாட்கள் நடைபெறும் என்றும் அதில் அதிரடி ஆக்ஷன் காட்சிகள் படமாக்கப்பட உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. தைவான் படப்பிடிப்பை முடித்துவிட்டு ’இந்தியன் 2’ படக்குழு தென் ஆப்பிரிக்கா செல்ல இருப்பதாகவும் அங்கு ஒரு பாடல் காட்சி மற்றும் ஆக்ஷன் காட்சி படமாக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. இத்துடன் அனேகமாக ‘இந்தியன் 2’ படப்பிடிப்பு நிறைவு பெறும் என கூறப்படுகிறது.

கமல்ஹாசன், காஜல் அகர்வால், சித்தார்த், ரகுல் ப்ரீத்தி சிங், ப்ரியா பவானி சங்கர், சமுத்திரக்கனி, பாபி சிம்ஹா, டெல்லி கணேஷ், ஜெயபிரகாஷ், குரு சோமசுந்தரம், வெண்ணிலா கிஷோர், ஜார்ஜ் மரியான், மனோபாலா உள்ளிட்ட பலர் நடித்த ‘இந்தியன் 2’ படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். ரத்னவேலு, ரவிவர்மன் ஒளிப்பதிவில், ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பில் உருவாகியுள்ள இந்த படத்தை லைகா மற்றும் ரெட் ஜெயண்ட் மூவீஸ் நிறுவனங்கள் தயாரித்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment