கமல், அர்ஜூனை அடுத்து இன்னொரு பிரபல ஹீரோவுக்கு கொரோனா பாதிப்பு!

  • IndiaGlitz, [Thursday,December 16 2021]

உலக நாயகன் கமல்ஹாசன் மற்றும் ஆக்சன் கிங் அர்ஜுன் ஆகியோர்களுக்கு கொரோனா தொற்று சமீபத்தில் பாதிக்கப்பட்ட நிலையில் தற்போது தமிழ் திரையுலகின் முன்னணி ஹீரோ ஒருவருக்கும் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

தமிழ் திரையுலகின் பிரபல நடிகர்களில் ஒருவரான சீயான் விக்ரம் அவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சற்றுமுன் தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் அதே நேரத்தில் நடிகர் விக்ரமுக்கு கொரோனா தொற்றின் லேசான அறிகுறி மட்டுமே இருப்பதால் மருத்துவரின் ஆலோசனைப்படி வீட்டிலேயே தனிமை படித்துக்கொண்டு சிகிச்சை பெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

நடிகர் விக்ரமுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதை அடுத்து அவர் விரைவில் குணமடைய வேண்டுமென அவரது ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். விக்ரமுக்கு கொரோனா தொற்று பாதிப்பு காரணமாக அவர் நடிக்க வேண்டிய படங்களின் படப்பிடிப்பு ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.