close
Choose your channels

கமல், அஜித், மோகன்லால், சிரஞ்சீவியை அடுத்து இன்னொரு பிரபலத்துடன் த்ரிஷா .. AAA கூட்டணி..!

Monday, April 1, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

திரையுலகில் கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக நாயகியாக நடித்து வரும் நடிகை த்ரிஷா தற்போது கமல்ஹாசன், அஜித், மோகன்லால், சிரஞ்சீவி என பிரபல நடிகர்களுடன் நடித்து கொண்டிருக்கும் நிலையில் தற்போது இன்னொரு பிரபல நடிகரின் அடுத்த படத்தில் நாயகியாக நடிக்க பேச்சுவார்த்தை நடந்து வருவதாக கூறப்படுகிறது.

நடிகை த்ரிஷா ’பொன்னியின் செல்வன்’ படத்தில் குந்தவை என்ற கேரக்டரில் நடித்த பிறகு வாய்ப்புகள் குவிந்து கொண்டிருக்கிறது என்பது தெரிந்தது. ஏற்கனவே விஜய்யுடன் ’லியோ’ படத்தில் நடித்த த்ரிஷா தற்போது ’கோட்’ படத்திலும் ஒரு பாடலுக்கு நடனம் ஆடி உள்ளார்.

இந்த நிலையில் கமல்ஹாசன் உடன் ’தக்லைஃப்’ அஜித்துடன் ’விடாமுயற்சி’ மோகன் லால் உடன் ’ராம்’, சிரஞ்சீவி உடன் ’விஸ்வாம்பரா’ உள்ளிட்ட படங்களில் நடித்துக் கொண்டிருக்கும் த்ரிஷா, அடுத்ததாக அல்லு அர்ஜுன் நடிப்பில் அட்லி இயக்கத்தில் உருவாக இருக்கும் திரைப்படத்தில் நடிக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் இந்த படத்தில் அவர் நடிப்பதற்கு அதிக வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

அல்லு அர்ஜுன், அட்லி, அனிருத் என AAA இணையும் இந்த படம் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாக இருப்பதாகவும் அப்போது த்ரிஷா இந்த படத்தில் நடிப்பது குறித்த தகவலும் இருக்கும் என்றும் கூறப்படுகிறது. இந்த நிலையில் முக்கிய நடிகர்களுடன் இணைந்து த்ரிஷா நடித்து வருவதை அடுத்து அவருக்கு ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment