4 லட்சம் முதல் 150 கோடி வரை.. 10 ஆண்டுகளில் பிரபாஸின் அசுர வளர்ச்சி..!
Send us your feedback to audioarticles@vaarta.com
பிரபாஸ் தனது முதல் படத்தில் வெறும் 4 லட்ச ரூபாய் சம்பளம் வாங்கிய நிலையில் 10 ஆண்டுகளில் அவர் அசுர வளர்ச்சி அடைந்து தற்போது இந்தியாவின் முன்னணி நடிகராக உள்ளார் என்பதும் அவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான ’கல்கி 2898 ஏடி’ திரைப்படத்திற்கு அவர் 150 கோடி ரூபாய் சம்பளம் வாங்கியுள்ளார் என்றும் தகவல் வெளியாகியுள்ளன.
நடிகர் பிரபாஸ் கடந்த 2002 ஆம் ஆண்டு ’ஈஸ்வரர்’ என்ற தெலுங்கு திரைப்படத்தில் தான் அறிமுகமானார். அந்த படத்திற்கு அவர் வாங்கிய சம்பளம் வெறும் 4 லட்சம் என்று அவரே ஒரு பேட்டியில் கூறியுள்ளார். அதன் பிறகு அவர் வருடத்திற்கு இரண்டு படங்கள் தொடர்ச்சியாக நடித்து வந்த நிலையில் ’ரிபெல்’ என்ற படத்தில் நடித்ததன் மூலம் அவர் ஆக்சன் நடிகராக அவதாரம் எடுத்தார் என்பதும் ராகவா லாரன்ஸ் இயக்கத்தில் உருவான இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. அதன் பின் தெலுங்கு திரையுலகில் பிரபாஸை ரிபெல் ஸ்டார் என்றே ரசிகர்கள் அழைத்து வருகின்றனர்.
இதனை அடுத்து ’பாகுபலி’ மற்றும் ’பாகுபலி 2’ ஆகிய இரண்டு படங்களும் அவரை இந்திய அளவில் மட்டுமின்றி உலக அளவில் கொண்டு போய் சேர்த்தது என்பதும், இதன் பின்னர் தான் அவரது சம்பளம் 100 கோடிக்கும் அதிகமாக சென்றது என்பது குறிப்பிடத்தக்கது. பாகுபலி படத்தின் இரண்டு பாகங்களின் வெற்றிக்கு பிறகு அவர் நடித்த ’சாஹோ’ ‘ராதேஷ் ஷ்யாம்’ ’ஆதி புருஷ்’ ‘சலார்’ ஆகிய படங்கள் எதிர்பார்த்த வெற்றியை தரவில்லை என்றாலும் அவருடைய சம்பளம் மட்டுமே குறையவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த சில நாட்களுக்கு முன் வெளியான ’கல்கி 2898 ஏடி’ திரைப்படத்தில் அவருக்கு 150 கோடி ரூபாய் சம்பளம் கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது. இதனை அடுத்து அவர் அடுத்தடுத்து நடிக்கும் படங்களிலும் அதைவிட அதிகமாக தான் அவர் சம்பளம் வாங்கி வருவதாகவும் தெரிகிறது. குறிப்பாக ’கண்ணப்பா’ திரைப்படத்தில் அவரது சம்பளம் மிகப் பெரிய தொகை என்றும் அதேபோல் ’சலார்’ இரண்டாம் பாகம் உள்பட சில படங்களில் நடித்து வரும் நிலையில் மேலும் அவருக்கு மிகப்பெரிய சம்பளம் கொடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.
மொத்தத்தில் பிரபாஸ் தெலுங்கு திரையுலகில் மட்டுமின்றி பான் இந்தியாவில் ஒரு தவிர்க்க முடியாத நடிகராகவும் மிகப்பெரிய சம்பளம் வாங்கும் நடிகர்களில் ஒருவராகவும் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
'கல்கி 2898 ஏடி’ படத்திற்கு பிறகு அவரது படங்கள் தொடர்ச்சியாக வெற்றி பெறும் படங்களாக இருக்கும் என்றும் பிரபாஸ் என்ற பிராண்ட் நேம் கல்கி 2898 ஏடி’ படம் மூலம் மிகப்பெரிய அளவில் உயர்ந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும் பிரபாஸ் ரசிகர்களுக்கு கல்கி 2898 ஏடி’ படம் ஒரு ஃபுல் மீல்ஸ் சாப்பிட்டது போன்ற திருப்தியை உள்ளதை அடுத்து ரசிகர்கள் இந்த படத்தை கொண்டாடி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com