'கைதி 2' படத்தை அடுத்து இன்னொரு சூப்பர் ஹிட் இரண்டாம் பாகம்.. கார்த்தி அறிவிப்பு..!

  • IndiaGlitz, [Saturday,October 21 2023]

கார்த்தி நடிப்பில் கடந்த 2019 ஆம் ஆண்டு வெளியான ’கைதி’ திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில் இந்த படத்தின் இரண்டாம் பாகம் விரைவில் உருவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அனேகமாக ’தலைவர் 171’ படத்தை இயக்கி முடித்தவுடன் இயக்குனர் லோகேஷ் கனகராஜ், ’கைதி 2’ படத்தை தொடங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் கார்த்தி நடித்த இன்னொரு திரைப்படத்தின் இரண்டாம் பாகம் குறித்த அறிவிப்பை அவரே தனது சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார். நடிகர் கார்த்தி நடித்த ’சர்தார்’ திரைப்படம் வெளியாகி இன்றோடு ஒரு வருடம் நிறைவடைவதை அடுத்து, அவர் வெளியிட்டுள்ள வீடியோவில் ’சர்தார் 2’ விரைவில் உருவாகும் என்று தெரிவித்துள்ளார்.

’கைதி 2’ ’சர்தார் 2’ என அடுத்தடுத்து இரண்டு சூப்பர் ஹிட் படங்களின் இரண்டாம் பாகங்களில் கார்த்தி நடிக்க இருப்பது அவரது ரசிகர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது

இந்த நிலையில் கார்த்தி நடித்த ’ஜப்பான்’ திரைப்படம் வரும் தீபாவளி அன்று திரையரங்குகளில் பிரம்மாண்டமாக வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ராஜு முருகன் இயக்கத்தில் உருவான இந்த படம் கார்த்தியின் 25வது படம் என்பதும் தெரிந்ததே

More News

தெலுங்கில் வசூலை அள்ளும் 'லியோ': 2 நாள் வசூல் இத்தனை கோடியா?

தளபதி விஜய் நடித்த  'லியோ' திரைப்படம் நேற்று முன்தினம் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்று வருகிறது என்பதும் இந்த படம் வசூலையும் வாரி குவித்து வருகிறது என்பதையும் பார்த்து வருகிறோம்.

விஷால், ஆர்யா இணைந்து வெளியிட்ட  சதீஷ் பட ஃபர்ஸ்ட் சிங்கிள்:  “லைஃப் இஸ் மேஜிக்”!!

நகைச்சுவை நாயகன் சதீஷ் நடிப்பில் வித்தியாசமாக உருவாகியுள்ள “வித்தைக்காரன்” படத்தின் முதல் சிங்கிள் “லைஃப் இஸ் மேஜிக்”  பாடலை தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரங்கள் விஷால் மற்றும் ஆர்யா

டேஞ்சர் ஜோனில் இருந்த 3 பெண் போட்டியாளர்களும் எஸ்கேப்.. அப்ப எவிக்சன் இவரா?

விஜய் டிவியில் பிக்பாஸ் நிகழ்ச்சி விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் ஒவ்வொரு வாரமும் நாமினேஷனில் சிக்கிய போட்டியாளர்களில் குறைந்த வாக்குகள் பெற்றவர் எலிமினேஷன்

ரஜினியை அடுத்து 'லியோ' படம் பார்த்த கமல்.. வைரல் புகைப்படம்..!

தளபதி விஜய் நடித்த 'லியோ' திரைப்படம் நேற்று முன்தினம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் இந்த படத்தை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஏற்கனவே பார்த்து, தயாரிப்பாளருக்கு வாழ்த்து தெரிவித்தார்

பிக்பாஸ் ரட்சிதா மகாலட்சுமி வீட்டில் நேர்ந்த துக்கம்.. சின்னத்திரையுலகினர் இரங்கல்..!

சின்னத்திரை நடிகை மற்றும் பிக் பாஸ் போட்டியாளர்களின் ஒருவரான ரட்சிதா மகாலட்சுமியின் தந்தை உடல்நலக்குறைவால் காலமான நிலையில் ரசிகர்கள் மற்றும் தொலைக்காட்சி நண்பர்கள் அவருக்கு ஆறுதல்