ரஜினி 161: மும்பையை கலங்க வைத்த தமிழ் டான் கேரக்டரில் ரஜினி?
- IndiaGlitz, [Thursday,April 20 2017]
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுக்கு டான் வேடம் என்பது புதியதல்ல. பாட்ஷா தொடங்கி கபாலி வரை அவர் எத்தனையோ படங்களில் டான் வேடத்தில் கலக்கியுள்ளார். இந்த நிலையில் 'கபாலி'யை அடுத்து ரஞ்சித் இயக்கவுள்ள அடுத்த படத்தில் ரஜினிகாந்த் மும்பையை பல வருடங்களாக தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்த ஹாஜி மஸ்தான் கேரக்டரில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.
தமிழரான ஹாஜி மஸ்தான், மும்பையில் கடத்தல் மன்னனாக இருந்தவர். அதுமட்டுமின்றி திரைப்பட பைனான்சியர், ரியல் எஸ்டேட் தொழிலதிபர் என பல்வேறு தொழில்கள் செய்து வந்த இவர் பாலிவுட் நட்சத்திரங்களுக்கும், அரசியல்வாதிகளுக்கும் நெருக்கமானவராக இருந்தவர். கருப்புப்பணத்தில் இவர் மூழ்கியிருந்தாலும் இவர் பயன்படுத்தும் அனைத்து பொருட்களும் வெள்ளைதானாம். வெள்ளை உடை, வெள்ளை ஷூ, காஸ்ட்லி வெள்ளை சிகரெட், வெள்ளை நிற மெர்சிடிஸ் கார் என முழுக்க முழுக்க வெள்ளையாக இருந்த இவர் மும்பை முஸ்லீம் இளைஞர்களுக்கு ஹீரோவாக திகழ்ந்தார்.
ரஜினி-ரஞ்சித் இணையும் 'ரஜினி 161' படத்தின் கதை இவருடைய வாழ்க்கையில் நடந்த அதிரடி திருப்பங்கள் மற்றும் கற்பனை கலந்தது என்று கூறப்படுகிறது.ரஜினி நடிப்பில் ரஞ்சித் இயக்கத்தில் தனுஷ் தயாரிப்பில் மீண்டும் ஒரு சூப்பர் ஹிட் படத்திற்கு கோலிவுட் தயாராகி வருகிறது.