'கபாலி'க்கு பின் 'சி 3' படத்திற்கு சென்னை ஐகோர்ட் வழங்கிய முக்கிய தீர்ப்பு

  • IndiaGlitz, [Wednesday,February 08 2017]

சூர்யா நடிப்பில் ஹரி இயக்கிய 'சி 3' திரைப்படம் நாளை முதல் உலகம் முழுவதும் தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் பிரமாண்டமாக வெளியாகவுள்ள நிலையில் இந்த படம் தயாரிப்பாளரின் அனுமதி இல்லாமல் எந்த ஒரு இணையதளமும் வெளியிட கூடாது என சென்னை உயர் நீதி மன்றத்தில் சி3 திரைப்படத்தின் தயாரிப்பாளர் K.E. ஞானவேல் ராஜா சார்பில் வக்கீல் விஜய் ஆனந்த் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு இன்று சென்னை உயர் நீதி மன்றத்தில் விசாரணைக்கு வந்த போது நீதிபதி திரு. கல்யாண சுந்தரம் அவர்கள் சூர்யாவின் சி3 திரைப்படத்தை எந்த ஒரு இணைய தளத்திலும் யாரும் தயாரிப்பாளரின் அனுமதி இல்லாமல் வெளியிட கூடாது என தீர்ப்பு வழங்கியுள்ளார்.

இதற்கு முன் இதே போல் சூப்பர் ஸ்டார் ரஜினி காந்தின் நடிப்பில் கலைப்புலி s.தாணு தயாரிப்பில் வெளிவந்த கபாலி திரைப்படத்தை யாரும் தயாரிப்பு நிறுவனத்தின் அனுமதி இல்லாமல் இணைய தளத்தில் வெளியிட கூடாது என்று சென்னை உயர் நீதி மன்றம் தீர்ப்பு வழங்கி இருந்தது குறிப்பிடதக்கது.

More News

சேமிப்பு கணக்கில் இருந்தும் பணம் எடுக்க கட்டுப்பாடு தளர்வு. ஆர்பிஐ உத்தரவு

கடந்த ஆண்டு நவம்பர் 8ஆம் தேதி ரூ.500, ரூ.1000 நோட்டுக்கள் செல்லாது என்று அறிவிக்கப்பட்டு புதிய ரூ.2000 மற்றும் ரூ.500 நோட்டுக்கள் அறிமுகப்படுத்தப்பட்டது. மேலும் வங்கியின் கணக்கில் இருந்து பணம் எடுக்கவும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டது...

அதிமுக எம்.எல்.ஏக்கள் கடத்தலா? எம்.எல்.ஏக்களுடன் செல்லும் 2 பேருந்து எங்கே ?

இன்று காலை அதிமுக எம்.எல்.ஏக்களின் கூட்டம் சென்னை ராயப்பேட்டையில் அதிமுக தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் சசிகலா தலைமையில் நடந்தது...

என் சொத்துக்களை மிரட்டி வாங்கியவர் ஆட்சி அதிகாரத்தில் அமர்வதா? கங்கை அமரன் ஆவேசம்

பிரபல இசையமைப்பாளரும், பாஜக் கட்சியில் பணியாற்றி வருபவருமான கங்கை அமரன் இன்று செய்தியாளர்களை சந்தித்து தற்போது தமிழகத்தில் நடைபெற்று வரும் அசாதாரணமான சூழ்நிலை குறித்து தனது கருத்தை தெரிவித்தார். அப்போது அவர் கூறியதாவது:

தனிக்கட்சி தொடங்க திட்டமா? ஓபிஎஸ் அதிரடி பதில்

தமிழக முதல்வர் ஓபிஎஸ் அவர்கள் சமீபத்தில் தனது பதவியை ராஜினாமா செய்துவிட்ட நிலையில் மக்கள் விரும்பினால் ராஜினாமாவை திரும்ப பெற்றுவிட்டு மீண்டும் முதல்வர் பதவியை ஏற்பேன் என்று ஏற்கனவே கூறியிருந்தார்...

திமுக ஆதரவை கோர மாட்டேன். ஓபிஎஸ்

தமிழக முதல்வர் ஓபிஎஸ் அவர்கள் தற்போது தனியார் தொலைக்காட்சி ஒன்றில் பேட்டி அளித்து கொண்டு வருகிறார்...