ரஜினி, விஜய் படங்களுக்கு பின்னர் 'பத்மாவத்' படத்திற்கு கிடைத்த பெருமை.

  • IndiaGlitz, [Friday,January 19 2018]

பிரான்ஸ் நாட்டில் உள்ள கிராண்ட் ரெக்ஸ் என்ற திரையரங்கம் உலகிலேயே அதிக இருக்கைகள் கொண்ட மிகப்பெரிய, மிக பிரமாண்டமான தியேட்டர் என்பது அனைவரும் அறிந்ததே. இந்த திரையரங்கில் ஹாலிவுட் படங்கள் மட்டுமே திரையிடப்பட்டு வந்த நிலையில் முதன்முதலாக வெளியான தமிழ்ப்படம் என்ற பெருமையை பெற்றது சூப்பர் ஸ்டார் ரஜினியின் 'கபாலி' திரைப்படம்.

மேலும் 'கபாலி'யை அடுத்து தளபதி விஜய் நடித்த 'மெர்சல்' திரைப்படமும் இந்த திரையரங்கில் திரையிடப்பட்டது. இந்த நிலையில் ரஜினியின் 'கபாலி' மற்றும் விஜய்யின் 'மெர்சல்' ஆகிய படங்களை அடுத்து திரையிடப்படும் இந்திய திரைப்படம் 'பத்மாவத்' என்பது குறிப்பிடத்தக்கது.

ஆம், பல்வேறு தடைகளை தாண்டி வரும் 25ஆம் தேதி உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளியாகவுள்ள இந்த திரைப்படம் கிராண்ட் ரெக்ஸ் திரையரங்கில் வரும் 26ஆம் தேதி இரவு 7.30 மணிக்கு சிறப்புக் காட்சியாக திரையிடப்படுகிறது. 1300 பால்கனி இருக்கைகள் உள்பட மொத்தம் 2800 இருக்கைகள் கொண்ட இந்த திரையரங்கில் மீண்டும் ஒரு இந்திய திரைப்படம் திரையிடப்படுவது பெருமைக்குரியதாக கருதப்படுகிறது.