'காலா'வை அடுத்து 'விஸ்வரூபம் 2' படத்திற்கும் தடையா?

  • IndiaGlitz, [Saturday,June 02 2018]

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'காலா' திரைப்படம் வரும் 7ஆம் தேதி வியாழக்கிழமை உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளியாகவுள்ளது. ஆனால் இந்த படத்தை வெளியிட கர்நாடக திரைப்பட வர்த்தக சபை தடை விதித்துள்ளது. இந்த படத்திற்கு சுமார் 10 கன்னட அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளதால் இந்த படம் தடை செய்யப்பட்டுள்ளது. மேலும் 'காலா' பட விவகாரத்தில் கர்நாடக அரசு தலையிடாது என்று முதல்வர் குமாரசாமி நேற்று தெரிவித்துவிட்டதால் இந்த படம் கர்நாடகத்தில் வெளியாக வாய்ப்பு இல்லை என்றே கருதப்படுகிறது.

இந்த நிலையில் சற்றுமுன் பேட்டியளித்த கர்நாடக திரைப்பட வர்த்தக சபை தலைவர் சாரா கோவிந்த் அவர்கள், 'ரஜினி, கமல் படங்களை தவிர, பிற படங்களை கர்நாடகாவில் வெளியிடுவதற்கு எந்த ஆட்சேபனையும் இல்லை' என்று கூறியுள்ளார். எனவே கமல் நடிப்பில் விரைவில் வெளியாகவுள்ள 'விஸ்வரூபம் 2' படமும் தடை செய்யப்படும் என தெரிகிறது.

கமல்ஹாசன், ரஜினிகாந்த் ஆகிய இருவருமே காவிரி விவகாரத்தில் தமிழகத்திற்கு ஆதரவாக கருத்துக்களை தெரிவித்தவர்கள் என்பதும், கன்னடர்கள் எதிர்த்த காவிரி மேலாண்மை வாரியத்தை அமைத்தே தீரவேண்டும் என்று வலியுறுத்தியவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

More News

தமிழிசை குறித்து அவதூறு வீடியோ: திருச்சி இளம்பெண் அதிரடி கைது

திருச்சியை சேர்ந்த இளம்பெண் ஒருவர் தமிழக பாஜக தலைவர் தமிழிசை செளந்திரராஜன் குறித்து அவதூறான வீடியோ ஒன்றை தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்டதாக கைது செய்யப்பட்டுள்ளார்.

அடல்ட் காமெடி படங்கள் தொடருமா? கவுதம் கார்த்திக் பதில்

'ஹரஹர மகாதேவி' மற்றும் 'இருட்டு அறையில் முரட்டுக்குத்து' ஆகிய இரண்டு அடல்ட் படங்களில் அடுத்தடுத்த நடித்தvar நடிகர் கவுதம் கார்த்திக்

பிரபல சின்னத்திரை நடிகை விபச்சார வழக்கில் கைது

பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் 'வாணி ராணி' சீரியல் உள்பட பல சீரியல்களில் நடித்து வரும் சின்னத்திரை நடிகை சங்கீதா, இளம் நடிகைகளை வைத்து விபச்சாரம் செய்ததாக கைது செய்யப்பட்டுள்ளார்.

தூத்துக்குடி துப்பாக்கி சூடு: ரஜினி நிதியுதவியை வாங்க மறுத்த 4 குடும்பத்தினர்

தூத்துகுடியில் ந்டைபெற்ற ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராட்டத்தில் 100வது நாள் போராட்ட தினத்தில் வன்முறை வெடித்து இதன் காரணமாக போலீசார் துப்பாக்கி சூடு நடத்தினர்

சென்னையில் மேலும் ஒரு காவலர் தற்கொலை

சமீபகாலமாக காவல் துறையை சேர்ந்தவர்கள் தற்கொலை செய்யும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது