ரஜினிக்கு 14 வினாடி, விஜய்க்கு 10 வினாடி: அதிர்ச்சியில் திரையுலகம்

  • IndiaGlitz, [Tuesday,February 13 2018]

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'காலா' திரைப்படம் வரும் ஏப்ரல் 27ஆம் தேதி வெளியாகும் என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த படத்தின் 14 வினாடி சண்டைக்காட்சி ஒன்று சமீபத்தில் இணையதளத்தில் லீக் ஆகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் தளபதி விஜய் நடித்து வரும் 'விஜய் 62' படத்தின் 10 வினாடி சண்டைக்காட்சி ஒன்றும் தற்போது இணையத்தில் லீக் ஆகியிருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

இந்த படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு கொல்கத்தாவில் மிகுந்த பாதுகாப்புடன் நடந்து வரும் நிலையிலும் இப்படத்தின் காட்சிகள் லீக் ஆகியுள்ளது படக்குழுவினர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. மொட்டை மாடியில் படமாக்கப்பட்டிருக்கும் இந்த சண்டைக்காட்சியின் வீடியோ எப்படி லீக் ஆனது என்பது குறித்து படக்குழுவினர் விசாரணை செய்து வருகின்றனர்.

இந்த சம்பவத்தை அடுத்து படப்பிடிப்பு தளத்தில் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.