ஸ்ரீதேவி மகள் ஜான்வி கபூரின் இன்னொரு தென்னிந்திய படம்.. பிரபல ஹீரோவுக்கு ஜோடி..!
Send us your feedback to audioarticles@vaarta.com
மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர் ஏற்கனவே ஜூனியர் என்டிஆர் நடித்து வரும் ’தேவாரா’ என்ற படத்தில் நாயகியாக நடித்து வரும் நிலையில் தற்போது இன்னொரு தென்னிந்திய நடிகரின் படத்தில் நடிக்க இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜானகி கபூர் கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியான ’தடக்’ என்ற ஹிந்தி படத்தில் அறிமுகம் ஆகி அதன் பிறகு தொடர்ச்சியாக ஒரு சில இந்தி படங்களில் நடித்தார்.
இந்த நிலையில் ஜூனியர் என்டிஆர் நடித்து வரும் ’தேவாரா’ என்ற படத்தின் நாயகியாக ஜான்வி கபூர் நடித்து வரும் நிலையில் தற்போது ராம்சரண் தேஜா நடிக்க இருக்கும் படத்திலும் நாயகியாக நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார். இது குறித்து அறிவிப்பை இந்த படத்தின் தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.
இன்று ஜான்வி கபூர் தனது பிறந்த நாளை கொண்டாடி வரும் நிலையில் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து ராம்சரண் தேஜாவின் ‘ஆர்சி 16’ படத்தின் நாயகி என தயாரிப்பு நிறுவனம் உறுதி செய்துள்ளது
புச்சிபாபு இயக்கத்தில், ஏஆர் ரகுமான் இசையில், ரத்னவேலு ஒளிப்பதிவில் உருவாகும் இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Welcoming the celestial beauty on board for #RC16 ✨
— Mythri Movie Makers (@MythriOfficial) March 6, 2024
Happy Birthday to the mesmerizing #JanhviKapoor ❤️🔥#RamCharanRevolts
Global Star @AlwaysRamCharan @BuchiBabuSana @arrahman @RathnaveluDop @artkolla @vriddhicinemas @SukumarWritings pic.twitter.com/DGT335D4no
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com