நீளும் 'தளபதி 68' கதாநாயகி லிஸ்ட்.. ஜோதிகா, சிம்ரனை அடுத்து இவரா? 20 வருடங்கள் கழித்து இணைகிறாரா?
Send us your feedback to audioarticles@vaarta.com
தளபதி விஜய் நடிக்க இருக்கும் ’தளபதி 68’ திரைப்படத்தில் ஜோதிகா கதாநாயகியாக நடிக்க போவதாக கூறப்பட்ட நிலையில், இதனை அடுத்து ஜோதிகாவுக்கு பதில் சிம்ரன் நடிக்க இருப்பதாக கூறப்பட்டது. ஆனால் தற்போது இன்னொரு நடிகையிடம் படக்குழுவினர் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தளபதி விஜய் நடிப்பில், வெங்கட் பிரபு இயக்கத்தில், ஏஜிஎஸ் நிறுவனத்தின் தயாரிப்பில், யுவன் சங்கர் ராஜா இசையில் உருவாக இருக்கும் திரைப்படம் ’தளபதி 68’. இந்த படத்தில் அப்பா மகன் என இரண்டு வேடங்களில் விஜய் நடிக்க இருப்பதாக கூறப்படும் நிலையில் மகன் விஜய்க்கு பிரியங்கா மோகன் தான் ஜோடி என்பது கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டு விட்டது.
ஆனால் அப்பா விஜய்க்கு ஜோடியை தேடுவதில் தான் படக்குழுவினர்களுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. முதலில் ஜோதிகாவை ஒப்பந்தம் செய்ய முடிவு செய்திருந்த நிலையில் திடீரென சிம்ரனிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாக செய்தி வெளியானது. இந்த நிலையில் தற்போது வந்த தகவலின்படி சினேகாவிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் விரைவில் இது குறித்து அறிவிப்பு வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.
விஜய் நடிப்பில் கடந்த 2003ஆம் ஆண்டு வெளியான ’வசீகரா’ திரைப்படத்தில் சினேகா நாயகியாக நடித்திருந்தார். இந்த படம் எதிர்பார்த்த வெற்றி பெறாத நிலையில் 20 வருடங்கள் கழித்து மீண்டும் விஜய் ஜோடியாக சினேகா நடிப்பாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments