'ஜப்பான்', 'ஜிகர்தண்டா 2' வை அடுத்து தீபாவளி ரேஸில் இணையும் இன்னொரு படம்..!

  • IndiaGlitz, [Thursday,October 12 2023]

வரும் தீபாவளிக்கு கார்த்தி நடித்த ’ஜப்பான்’ மற்றும் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவான ’ஜிகர்தண்டா 2’ ஆகிய இரண்டு திரைப்படங்கள் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட நிலையில் தீபாவளி பட்டியலில் இன்னொரு திரைப்படம் இணைய இருப்பதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது.

ஏற்கனவே தீபாவளி தினத்தில் வெளியாகும் என்று கூறப்பட்ட ’அயலான்’ படம் அடுத்த ஆண்டு பொங்கல் தினத்தில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் விக்ரமின் ‘துருவ நட்சத்திரம்’ படம் தீபாவளிக்கு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அந்த படமும் நவம்பர் 24ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் ’ஜப்பான்’ ’ஜிகர்தண்டா 2’ ஆகிய இரண்டு படங்கள் மட்டுமே தீபாவளிக்கு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது விக்ரம் பிரபு நடித்த ’ரெய்டு’ என்ற திரைப்படம் தீபாவளிக்கு ரிலீசாக இருப்பதாக கூறப்படுகிறது.சமீபத்தில் வெளியான ’இறுகப்பற்று’ என்ற திரைப்படத்தில் விக்ரம் பிரபு நடிப்பு பாராட்டப்பட்ட நிலையில் அவர் நடித்த முடித்துள்ள ’ரெய்டு’ திரைப்படம் ரிலீசுக்கு தயாராகி உள்ளது..

கன்னடத்தில் சிவராஜ்குமார் நடிப்பில் உருவான ’தகறு’ என்ற திரைப்படத்தின் ரீமேக் படமான இந்த படத்தில் ஸ்ரீதிவ்யா, அனந்திகா, ரிஷி ரித்விக், சவுந்தர்ராஜா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். கார்த்தி இயக்கத்தில், சாம் சிஎஸ் இசையில், கதிரவன் ஒளிப்பதிவில் மணிமாறன் படத்தொகுப்பில் உருவாகிய இந்த படம் தீபாவளிக்கு ரிலீசாகும் என்றும் இது குறித்து முறையான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

More News

'என்னுயிர் தோழன்' பாபு வீட்டில் மூன்றே வாரத்தில் இன்னொரு சோகம்.. குடும்பத்தினர் அதிர்ச்சி..!

இயக்குனர் இமயம் பாரதிராஜா இயக்கத்தில் உருவான 'என்னுயிர் தோழன்'  என்ற திரைப்படத்தில் ஹீரோவாக நடித்தவர் பாபு. இந்த படம் மிகப்பெரிய வெற்றிபெற்ற நிலையில் அதன் பிறகு பாபு சுமார் பத்து படங்களில்

தொழிலதிபரை மணந்த 'சிறகடிக்க ஆசை' நடிகை.. வைரல் புகைப்படங்கள்..!

விஜய் டிவியில் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை என்ற சீரியலில் நடித்த நடிகை தொழிலதிபரை திருமணம் செய்து கொண்ட நிலையில் திருமணம் புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன.  

நல்லா ஏத்தி விட்றாளுக, ஆனாலும் எதிலும் மாட்ட மாட்டேங்குறான்.. தனியாக புலம்பும் விசித்ரா..!

பிக் பாஸ் நிகழ்ச்சியின் போட்டியாளர்களில் ஒருவரான விசித்ரா சக போட்டியாளர்கள் குறித்து தனியாக புலம்பி கொண்டிருக்கும் வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

'ஜவான்' ஓடிடி ரிலீஸ் தேதி.. நாளை தியேட்டரில் பார்த்தால் ஒரு சர்ப்ரைஸ்.. ரசிகர்கள் குஷி..!

ஷாருக்கான், நயன்தாரா நடிப்பில், அட்லி இயக்கத்தில் உருவான 'ஜவான்' திரைப்படம் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பதும் இந்த படம் ரூ.1100 கோடிக்கு மேல் அதிகமாக வசூல் செய்து சாதனை

'லியோ' ரிலீஸ் ஆக சரியாக ஒரே வாரம்.. உதவி இயக்குனர்களுடன் லோகேஷ் எங்கே சென்றார் தெரியுமா?

தளபதி விஜய் நடித்த 'லியோ' திரைப்படம் வெளியாக சரியாக இன்னும் ஒரே ஒரு வாரம் மட்டுமே இருக்கும் நிலையில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தனது இயக்குனர் குழு உடன் திருப்பதி சென்று