close
Choose your channels

'ஜெயிலருக்கு அடுத்த படத்தில் 3 உச்ச நட்சத்திரங்கள்.. ஜாக்பாட் அடித்த நெல்சன்..!

Saturday, July 8, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ’ஜெயிலர்’ என்ற திரைப்படத்தை இயக்கி முடித்துள்ள நெல்சன் இயக்கும் அடுத்த படம் குறித்த தகவல் தற்போது கசிந்துள்ள நிலையில் அதில் தமிழ் திரை உலகின் மூன்று உச்ச நட்சத்திரங்கள் இணைய இருப்பதாக வெளிவந்திருக்கும் தகவல் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், தமன்னா, சிவராஜ் குமார், மோகன்லால் உள்பட பலர் நடிப்பில் உருவாகியுள்ள ’ஜெயிலர்’ திரைப்படம் வரும் ஆகஸ்ட் 10ஆம் தேதி வெளியாக உள்ளது.

இந்த நிலையில் நெல்சன் இயக்கும் அடுத்த திரைப்படத்தில் தனுஷ் நடிக்க இருப்பதாகவும் இந்த படத்தை கமல்ஹாசன் தயாரிக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன

இந்த படம் கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டு விட்டதாகவும் ’ஜெயிலர்’ திரைப்படத்தின் ரிலீஸுக்கு பின்னர் இந்த படத்தின் அதிகாரபூர்வமாக அறிவிப்பு வெளியாக இருப்பதாகவும் கூறப்படுகிறது.

மேலும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்க இருப்பதும் கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டுள்ளது. நீண்ட இடைவேளைக்கு பின்னர் தனுஷ் மற்றும் அனிருத் கூட்டணி இணைய உள்ளது என்பதும் அதேபோல் கமல்ஹாசன் மற்றும் தனுஷ் முதல் முறையாக இணையுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த ஆண்டு இறுதியில் இந்த படத்தின் ஆரம்பகட்ட பணிகள் தொடங்கி அடுத்த ஆண்டு இந்த படத்தின் படப்பிடிப்பு நடைபெறும் என்று கூறப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment