'ஜெயிலருக்கு அடுத்த படத்தில் 3 உச்ச நட்சத்திரங்கள்.. ஜாக்பாட் அடித்த நெல்சன்..!

  • IndiaGlitz, [Saturday,July 08 2023]

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ’ஜெயிலர்’ என்ற திரைப்படத்தை இயக்கி முடித்துள்ள நெல்சன் இயக்கும் அடுத்த படம் குறித்த தகவல் தற்போது கசிந்துள்ள நிலையில் அதில் தமிழ் திரை உலகின் மூன்று உச்ச நட்சத்திரங்கள் இணைய இருப்பதாக வெளிவந்திருக்கும் தகவல் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், தமன்னா, சிவராஜ் குமார், மோகன்லால் உள்பட பலர் நடிப்பில் உருவாகியுள்ள ’ஜெயிலர்’ திரைப்படம் வரும் ஆகஸ்ட் 10ஆம் தேதி வெளியாக உள்ளது.

இந்த நிலையில் நெல்சன் இயக்கும் அடுத்த திரைப்படத்தில் தனுஷ் நடிக்க இருப்பதாகவும் இந்த படத்தை கமல்ஹாசன் தயாரிக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன

இந்த படம் கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டு விட்டதாகவும் ’ஜெயிலர்’ திரைப்படத்தின் ரிலீஸுக்கு பின்னர் இந்த படத்தின் அதிகாரபூர்வமாக அறிவிப்பு வெளியாக இருப்பதாகவும் கூறப்படுகிறது.

மேலும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்க இருப்பதும் கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டுள்ளது. நீண்ட இடைவேளைக்கு பின்னர் தனுஷ் மற்றும் அனிருத் கூட்டணி இணைய உள்ளது என்பதும் அதேபோல் கமல்ஹாசன் மற்றும் தனுஷ் முதல் முறையாக இணையுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த ஆண்டு இறுதியில் இந்த படத்தின் ஆரம்பகட்ட பணிகள் தொடங்கி அடுத்த ஆண்டு இந்த படத்தின் படப்பிடிப்பு நடைபெறும் என்று கூறப்படுகிறது.

More News

பட பூஜையே போடல, அதற்குள் இத்தனை கோடி வியாபாரமா? கமல்-எச் வினோத் படத்தின் சாதனை..!

உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் எச் வினோத் இயக்கத்தில் உருவாக இருக்கும் 'கமல் 233' என்ற படம் குறித்த அறிவிப்பு சமீபத்தில் வெளியானது என்பதை பார்த்தோம். இருப்பினும் இந்த படத்தின் பூஜை கூட போடாத

ஒரிஜனலை விட நல்லா இருக்கு.. தமன்னா வெளியிட்ட 'காவாலா' நடன வீடியோ வைரல்..!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'ஜெயிலர்' படத்தில் இடம்பெற்ற 'காவாலா' என்ற பாடல் கடந்த நான்கு நாட்களுக்கு முன்னால் வெளியானது என்பதும் இந்த பாடல் இணையத்தில் 13 மில்லியனுக்கு மேல்

பெரியார், அம்பேத்கர், காமராஜர் குறித்து பேசினால் போதாது: விஜய்க்கு அட்வைஸ் கூறிய அன்புமணி..!

பெரியார், அம்பேத்கர், காமராஜர் குறித்து பேசினால் மட்டும் போதாது என்று என்றும் அவர்களுடைய கொள்கைகளை ஏற்று அதற்கு ஏற்ப நடந்து கொள்ள வேண்டும் என்றும் நடிகர் விஜய்க்கு  பாட்டாளி மக்கள் கட்சி தலைவர்

இவ்வளவு பணக்கார வீரரா? தோனியின் சொத்து மதிப்பு குறித்து வைரலாகும் தகவல்!

இந்தியா கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரராகவும் 3 விதமான ஐசிசி போட்டிகளிலும் இந்தியாவிற்கு கோப்பைகளைப் பெற்று தந்தவருமான மகேந்திர சிங் தோனி நேற்று தன்னுடைய 42 ஆவது பிறந்த நாளைக் கொண்டாடினார்

மனைவி மூளையைச் சமைத்துச் சாப்பிட்ட கணவர்? கொடூரத்தின் உச்சக்கட்டம்!

மெக்சிகோவில் வசித்துவரும் கட்டிடத் தொழிலாளி ஒருவர் தன்னுடைய சொந்த மனைவியின் மூளையை சமைத்து டாகோஸில் வைத்து சாப்பிட்டதாக ஒப்புக்கொண்டிருக்கும் தகவல்