'ஜெயிலர்' படத்தை அடுத்து நெல்சன் இயக்கும் படத்தின் ஹீரோ இந்த பிரபலமா?

  • IndiaGlitz, [Tuesday,May 16 2023]

'கோலமாவு கோகிலா’ என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான நெல்சன் அதன் பின்னர் சிவகார்த்திகேயன் நடித்த ’டாக்டர்’ என்ற படத்தின் வெற்றியை அடுத்து முன்னணி இயக்குனர்கள் பட்டியல் இணைந்தார். தளபதி விஜய் நடித்த ’பீஸ்ட்’ மற்றும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ’ஜெயிலர்’ ஆகிய படங்களை இயக்கி முடித்துள்ள நெல்சன் இயக்கும் அடுத்த படம் என்ன? அந்த படத்தின் ஹீரோ யார்? என்பது குறித்த தகவல்கள் தற்போது கசிந்துள்ளது.

நெல்சன் இயக்கத்தில் உருவாகயிருக்கும் அடுத்த படத்தின் ஹீரோ தனுஷ் என கூறப்படுகிறது. ’ஜெயிலர்’ படத்திற்கு பின் நெல்சன் இயக்கும் அடுத்த படத்தில் தனுஷ் நடிக்கவிருப்பது கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டுள்ளதாக கோலிவுட் வட்டாரங்கள் கூறுகின்றன.

தனுஷ் தற்போது ‘கேப்டன் மில்லர்’ என்ற திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளதை அடுத்து அவரது இயக்கத்தில் ஒரு படம் உருவாக உள்ளது. சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்த படத்தை முடித்தவுடன் அவர் நெல்சன் படத்தில் இணைவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நெல்சன் மற்றும் தனுஷ் இணையும் இந்த படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.