'ஜெயிலர்', 'கேப்டன் மில்லர்' படங்களை அடுத்து இன்னொரு பிரபல நடிகரின் படத்தில் சிவராஜ்குமார்..!

  • IndiaGlitz, [Friday,January 05 2024]

பிரபல கன்னட நடிகர் சிவராஜ்குமார் சமீபத்தில் வெளியான சூப்பர் ஸ்டார் ரஜினியின் ’ஜெயிலர்’ திரைப்படத்தில் ஒரு முக்கிய கேரக்டரில் நடித்தார். மேலும் அவர் தனுஷ் நடித்த ’கேப்டன் மில்லர்’ படத்திலும் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார். இந்த நிலையில் மேலும் ஒரு தென்னிந்திய நடிகர் திரைப்படத்தில் சிவராஜ்குமார் நடிக்க இருப்பதாக சமீபத்தில் அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

கன்னட சூப்பர் ஸ்டார் ஆக இருக்கும் சிவராஜ்குமார் தென்னிந்தியா முழுவதும் தற்போது பிரபலமாகி விட்டார் என்பதும் அவர் பிற மொழி படங்களிலும் நடித்து வருகிறார் என்பதையும் பார்த்து வருகிறோம்.

இந்த நிலையில் ’ஜெயிலர்’, ’கேப்டன் மில்லர்’ படங்களை அடுத்து ராம்சரண் தேஜா நடிக்க இருக்கும் அடுத்த திரைப்படத்தில் முக்கிய கேரக்டரில் சிவராஜ்குமார் நடிக்க உள்ளார். புச்சிபாபு இயக்கத்தில் உருவாக இந்த படத்திற்கு ஏ ஆர் ரஹ்மான் இசையமைக்க உள்ளார் என்பதும் இந்த படத்தில் ஏற்கனவே விஜய் சேதுபதி ஒரு முக்கிய கேரக்டரில் நடிக்க ஒப்பந்தம் ஆகிவிட்டதாகவும் கூறப்படுகிறது. மேலும் இந்த படத்தின் நாயகியாக சாய் பல்லவி நடிக்கவுள்ளார்.

ராம்சரண் தேஜா, சிவராஜ்குமார், விஜய் சேதுபதி, சாய் பல்லவி, ஏஆர் ரகுமான் மற்றும் ஒளிப்பதிவாளர் ரத்னவேலு ஆகிய பிரபலங்கள் ஒரே படத்தில் இணைந்துள்ளதால் இந்த படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

More News

பிக்பாஸ் வீட்டிற்குள் திடீரென வந்த இருவர்.. யார் அவர்கள்.. களைகட்டும் வீடு..!

பிக் பாஸ் நிகழ்ச்சி 95 நாள் முடிவடைந்து இன்று 96 வது நாள் ஒளிபரப்பாக இருக்கும் நிலையில் பிக் பாஸ் வீட்டிற்கு திடீரென இரண்டு பேர் வந்துள்ளது போட்டியாளர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

எது செய்தாலும், இங்குக் குறை சொல்ல கூட்டம் சுற்றிக்கொண்டே இருக்கிறது: 'கேப்டன் மில்லர்' விழாவில் தனுஷ்..!

 தனுஷ் நடித்த 'கேப்டன் மில்லர்' படத்தின் சமீபத்தில் சென்னை நேரு ஸ்டேடியத்தில் நடந்தது. இந்த விழாவில் இயக்குனர் அருண் மாதேஸ்வரன், நடிகர் சிவராஜ்குமார், தனுஷ்,

'என்னை அசைவம் சாப்பிட வைத்தவர்': விஜயகாந்த் நினைவிடத்தில் தேம்பி தேம்பி அழுத சூர்யா..

கேப்டன் விஜயகாந்த் கடந்த வாரம் காலமான நிலையில் இன்று நடிகர் சூர்யா அவருடைய நினைவிடத்திற்கு சென்று இறுதி அஞ்சலி செலுத்தி தேம்பி தேம்பி அழுதார். அதன் பிறகு அவர் செய்தியாளர்களிடம் பேசியதாவது:

பொங்கலுக்கு ரிலீஸ் ஆகும் லைகாவின் 2 படங்கள்.. இன்னொரு படம் எது தெரியுமா?

வரும் பொங்கல் திருநாளில் 'அயலான்', 'கேப்டன் மில்லர்' 'மெர்ரி கிறிஸ்துமஸ்' மற்றும் ''மிஷின் சாப்டர் 1' ஆகிய 4 முன்னணி தமிழ் நடிகர்களின் திரைப்படங்கள் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள

சிவகார்த்திகேயன் வேற லெவல் நடிகர்.. 'அயலான்' - 'கேப்டன் மில்லர்' மோதல் குறித்து சிவராஜ்குமார்..!

சிவகார்த்திகேயன் நடித்த 'அயலான்' மற்றும் தனுஷ் நடித்த 'கேப்டன் மில்லர்' ஆகிய இரண்டு திரைப்படங்களும் பொங்கல் விருந்தாக ஒரே நாளில் வெளியாக இருக்கும் நிலையில் இந்த போட்டி குறித்து