'ஜெயிலர் 2' படத்திற்கு பின் நெல்சன் இயக்கும் படம்.. ஹீரோ இந்த பிரபல நடிகரா?

  • IndiaGlitz, [Sunday,October 06 2024]

சூப்பர் ஸ்டாரான ரஜினிகாந்த் நடித்த ’ஜெயிலர் ’ திரைப்படத்தை இயக்கிய இயக்குனர் நெல்சன், அந்த படத்தின் இரண்டாம் பாகத்தை விரைவில் இயக்க இருப்பதாகவும், இந்த படத்தையும் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க இருப்பதாக கூறப்படும் நிலையில், இந்த படம் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

’ஜெயிலர் 2’ படத்தின் திரைக்கதை எழுதும் பணியை கிட்டத்தட்ட நெல்சன் முடித்து விட்டதாகவும், அதன் பின்னர் அடுத்த கட்ட பணிகள் தொடங்கும் என்று கூறப்படும் நிலையில், நெல்சன் இயக்க இருக்கும் இன்னொரு படம் குறித்த தகவல் தற்போது கசிந்துள்ளது.

’ஜெயிலர் 2’ படத்திற்கு பின் நெல்சன் இயக்கும் படத்தில் பிரபல தெலுங்கு நடிகர் ஜூனியர் என்.டி.ஆர் நடிக்கவுள்ளார் என செய்தி கசிந்துள்ளது. ஜூனியர் என்.டி.ஆரிடம் நெல்சன் கூறிய கதை ஓகே ஆனதை அடுத்து விரைவில் இந்த படம் குறித்து அறிவிப்பு வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

நெல்சன் ஸ்டைலில் உருவாகும் இந்த படம் முழுக்க முழுக்க கமர்ஷியல் எண்டர்டெயின்மெண்ட் படம் என்றும், இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. அதிலும், ஜூனியர் ஜூனியர் என்.டி.ஆருடன் நெல்சன் கைகோர்க்க உள்ளதால், இந்த படம் நிச்சயம் தென்னிந்திய அளவில் வசூல் சாதனை செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

More News

33 ஆண்டுகளுக்கு பின் இணையும் ரஜினிகாந்த் - மணிரத்னம் கூட்டணி: 'தளபதி 2' உருவாகிறதா?

சூப்பர் ஸ்டாரின் ரஜினிகாந்த் நடிப்பில் மணிரத்னம் இயக்கத்தில் உருவான 'தளபதி' திரைப்படம், கடந்த 1991 ஆம் ஆண்டு வெளியான நிலையில், மீண்டும் 33 ஆண்டுகள் கழித்து

'கோட்' படத்தில் விஜய் - சிவகார்த்திகேயன்.. படப்பிடிப்பு காட்சியின் வீடியோ வெளியீடு..!

தளபதி விஜய் நடித்த 'கோட்' திரைப்படத்தில் சிவகார்த்திகேயன் ஒரு சிறிய கேரக்டரில் நடித்திருந்த நிலையில் இந்த காட்சியை படமாக்கும் போது எடுக்கப்பட்ட வீடியோவை தயாரிப்பு நிறுவனம்

இந்த படத்தின் ரீமேக்கா 'தளபதி 69'? உண்மையாக இருந்தால் வேற லெவல்..!

தளபதி விஜய் நடிக்க இருக்கும் 69வது படத்தின் பூஜை நேற்று நடந்த நிலையில், இன்று முதல் படப்பிடிப்பு தொடங்கியதாக கூறப்படுகிறது. இந்த படம் சூப்பர் ஹிட் தெலுங்கு படத்தின் ரீமேக் என கூறப்படுகிறது.

'லவ் டுடே' படத்திற்கு பின் இன்னொரு விஜய் பட டைட்டில்.. அதிதி ஷங்கர் நாயகி.. டீசர் ரிலீஸ்..!

விஜய் நடித்த 'லவ் டுடே' என்ற படத்தின் டைட்டிலில் பிரதீப் ரங்கநாதன் நடித்த படம் வெளியாகி வெற்றி பெற்ற நிலையில் தற்போது விஜய் நடித்த இன்னொரு சூப்பர் ஹிட் படத்தின் டைட்டிலில்

கவின் நடிக்கும் 'பிளடி பெக்கர்'.. சூப்பர் அப்டேட் கொடுத்த இயக்குனர் நெல்சன்..!

கவின் நடிப்பில், நெல்சன் தயாரிப்பில் உருவாகி வரும் 'பிளடி பெக்கர்' என்ற படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து, தொழில்நுட்ப பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.