'இந்தியன் 2' படத்தை அடுத்து இன்னொரு படத்தின் படப்பிடிப்பை முடித்த கமல்ஹாசன்..!

  • IndiaGlitz, [Wednesday,December 20 2023]

உலகநாயகன் கமல்ஹாசன் ’இந்தியன் 2’ படத்தில் ஏற்கனவே நடித்து முடித்து விட்ட நிலையில் தற்போது இன்னொரு படத்திலும் தனக்குரிய பகுதியின் படப்பிடிப்பை முடித்து விட்டதாக தகவல் வெளியாகியுள்ளன

கமலஹாசன் ’இந்தியன் 2’ படத்தை அடுத்து ’கல்கி 2898AD’ என்ற படத்தில் நடித்து வருவதாகவும், இந்த படத்தில் அவர் வில்லன் கேரக்டரில் நடிக்க இருப்பதாகவும் அவர் இந்த படத்திற்காக 20 நாட்கள் கால்ஷீட் கொடுத்ததாகவும் கூறப்பட்டது

இந்த நிலையில் கமல்ஹாசன், 'கல்கி 2898AD’ படத்தின் 20 நாள் படப்பிடிப்பை முடித்து விட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. அடுத்த கட்டமாக அவர் மணிரத்னம் இயக்கும் படத்திற்கு தயாராக உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது

பிரபாஸ் முக்கிய கேரக்டரில் நடிக்கும் இந்த படத்தில் தீபிகா படுகோனே, துல்கர் சல்மான், திஷா பதானி, அமிதாப்பச்சன், ராணா உள்ளிட்ட பலர் நடிக்க உள்ளனர் என்பதும் பிரபல இயக்குனர் எஸ்எஸ் ராஜமவுலி சிறப்பு தோற்றத்தில் நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

’நடிகையர் திலகம்’ உள்பட சில படங்களை இயக்கிய நாக் அஸ்வின் இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படத்தின் அடுத்தடுத்த பாகங்களும் தயாரிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.