close
Choose your channels

'இந்தியன் 2' படத்தை அடுத்து ஓடிடியில் இன்னொரு கமல் படம்.. தேதி அறிவிப்பு..!

Wednesday, August 14, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

உலகநாயகன் கமல்ஹாசன் நடித்த ‘இந்தியன் 2’ திரைப்படம் சமீபத்தில் ஓடிடியில் வெளியான நிலையில் தற்போது அவரது இன்னொரு திரைப்படமான ’கல்கி 2898ஏடி’ திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் செய்து குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

பிரபாஸ், கமல்ஹாசன், அமிதாப் பச்சன், தீபிகா படுகோன், திஷா பதானி உள்ளிட்ட பலர் நடிப்பில், நாக் அஸ்வின் இயக்கத்தில் உருவான ’கல்கி 2898ஏடி’ திரைப்படம் கடந்த ஜூன் மாதம் வெளியாகி திரையரங்குகளில் நல்ல வரவேற்பு பெற்றது.

இந்த படம் உலகம் முழுவதும் ரூ.1050 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்ததாக அறிவிக்கப்பட்டிருந்தது என்பதும் மகாபாரதம் மற்றும் கல்கி அவதாரம் புராணக் கதையுடன் ஏஐ தொழில்நுட்பத்துடன் கூடிய எதிர்கால கற்பனையும் சேர்த்து உருவாக்கிய இந்த படம் தொழில்நுட்ப ரீதியாகவும் வரவேற்பை பெற்றது.

இந்த நிலையில் திரையரங்குகளில் மாபெரும் வெற்றி பெற்ற ’கல்கி 2898ஏடி’ வரும் ஆகஸ்ட் 23ஆம் தேதி அமேசான் ப்ரைம் ஓடிடியில் தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் என நான்கு மொழிகளில் வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment