இந்தியாவை அடுத்து அமெரிக்கா, ஆஸ்திரேலியாவிலும் தடையா? டிக்டாக் நிறுவனத்திற்கு சிக்கல்

  • IndiaGlitz, [Tuesday,July 07 2020]

இந்தியா மற்றும் சீனா ராணுவ வீரர்களிடையே கால்வான் பள்ளத்தாக்கில் சமீபத்தில் ஏற்பட்ட மோதல் காரணமாக 20 இந்திய ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். இந்த மோதலை அடுத்து சீனாவுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கத் தொடங்கிய மத்திய அரசு அதிரடியாக சீனாவின் 59 செயலிகளுக்கு தடை விதித்தது. குறிப்பாக இந்தியாவில் அதிக வாடிக்கையாளர்களைக் கொண்ட டிக்டாக் தடை செய்யப்பட்டதால் டிக்டாக்கின் சீன நிறுவனத்திற்கு ரூ.40,000 கோடி நஷ்டம் ஏற்பட்டதாக கூறப்பட்டது.

இந்தியாவின் பாதுகாப்பு மற்றும் வாடிக்கையாளர்களின் டேட்டாவை திருடுவது ஆகிய காரணங்களால் டிக்டாக் தடை செய்யப்பட்டதாக மத்திய அரசு தரப்பில் கூறப்பட்டது. இந்த நிலையில் இந்தியாவை அடுத்து அமெரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா நாடுகளும் டிக்டாக்கை தடை செய்ய திட்டமிட்டு வருவதாக வெளிவந்துள்ள செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

அமெரிக்க அரசின் முக்கிய அதிகாரி ஒருவர் இது குறித்து கருத்து கூறிய போது ’டிக் டாக் செயலி மீது பல புகார்கள் வந்துள்ளதாகவும் தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாகவும் இந்த செயலியால் தங்கள் நாட்டின் வாடிக்கையாளர்களின் தகவல்களை சீன அரசு திருடி வருவதாகவும், எனவே டிக்டாக்கை தடை செய்ய ஆலோசிக்கப்பட்டு வருவதாகவும் கூறியுள்ளார்.

அதேபோல் ஆஸ்திரேலிய அரசும் விரைவில் டிக் டாக் செயலியை தடை செய்ய திட்டமிட்டு வருவதாக வெளிவந்துள்ள செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த தகவலை ஆஸ்திரேலிய எம்பி ஒருவரும் உறுதி செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவில் தொடர்ந்து அமெரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா நாடுகளும் டிக்டாக்கை தடை செய்தால் அதனை அடுத்து பல நாடுகள் இந்த செயலியை தடை செய்யும் வாய்ப்பு இருப்பதாக கூறப்படுவதால் டிக் டாக் செயலிக்கு ஒட்டுமொத்தமாக மூடு விழா நடைபெறும் நாள் வெகு தொலைவில் இல்லை என்றே கருதப்படுகிறது.

கடந்த சில மாதங்களில் டிக் டாக் செயலியை 2 பில்லியன் வாடிக்கையாளர்கள் டவுன்லோட் செய்து உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

தங்கிய ஹாஸ்டல் திருமணம் செய்து கொண்ட காதல் மருத்துவர்கள்: நண்பர்கள் வாழ்த்து

இந்த கொரோனா வைரஸ் ஊரடங்கு காலத்தில் ஆடம்பரமாக நடத்த திட்டமிட்டிருந்த பல திருமணங்கள் ஊரடங்கு காரணமாக எளிமையாக நடத்தப்பட்டு வருவது குறித்த செய்திகளை அவ்வப்போது பார்த்து வருகிறோம்.

கொரோனா வைரஸ் போரில் களமிறங்கும் கவுதம் மேனன்!

கொரோனா வைரஸ்க்கு எதிராக இந்தியாவில் மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வந்தும் தினமும் ஆயிரக்கணக்கானோர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டும், நூற்றுக்கணக்கானோர்

திருச்சி அருகே 9ஆம் வகுப்பு மாணவி எரித்து கொலை: ஜெயப்ரியாவை அடுத்து இன்னொரு கொடூரம்!

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே 7 வயது சிறுமி ஜெயப்ரியா, பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்த சம்பவம் நடந்து இரண்டு நாட்களில் தற்போது திருச்சி அருகே ஒன்பதாம் வகுப்பு மாணவி

ஒரே நாளில் உலக அளவில் இரண்டாவது இடம்: கொரோனா பாதிப்பில் இந்தியாவுக்கு அதிர்ச்சி

கடந்த சில வாரங்களுக்கு முன் உலகில் அதிகம் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்ட நாடுகளின் பட்டியலில் 10வது இடத்திற்கும் கீழே இருந்த இந்தியா, சமீபத்தில் 4வது இடத்திற்கு முன்னேறியது

50% சம்பளத்தை குறைத்த கோலிவுட்டின் முன்னணி நடிகை!

கொரோனா வைரஸ் காரணமாக கடந்த நான்கு மாதங்களாக படப்பிடிப்பு எதுவும் நடக்காததால் தயாரிப்பாளர்களுக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்து தயாரிப்பாளருக்கு உதவும் வகையில்