close
Choose your channels

எம்.ஜி.ஆரின் 'இதயக்கனி' படத்துடன் கனெக்சன் ஆகும் 'கும்கி 2'

Friday, August 3, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். நடித்த சூப்பர் ஹிட் படமான 'இதயக்கனி' படத்துடன் பிரபுசாலமன் இயக்கி வரும் 'கும்கி 2' படம் கனெக்சன் ஆகியுள்ளது.

கடந்த 2012 ஆம் ஆண்டு பிரபு சாலமன் இயக்கத்தில் வெளியான 'கும்கி' திரைப்படம் சூப்பர் ஹிட் ஆன நிலையில் ஆறு ஆண்டுகளுக்கு பின்னர் தற்போது அவர் இந்த படத்தின் இரண்டாம் பாகமான 'கும்கி 2' என்ற படத்தை இயக்கி வருகிறார்.

இந்த நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது மைசூர் அருகே உள்ள சிவ சமுத்திரம் அருவியில் விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. எம்.ஜி.ஆர் நடித்த 'இதயக்கனி' படப்பிடிப்பிற்கு பிறகு 'கும்கி 2' படப்பிடிப்பு தான் அங்கு நடைபெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மதியழகன் நாயகனாக அறிமுகமாகும் இந்த படத்தின் நாயகி இன்னும் முடிவாக வில்லை. ஹரிஷ் பெராடி, ஆர்.ஜே.பாலாஜி,சூசன், கோலங்கள் திருச்செல்வம், ஸ்ரீநாத், ஆகாஷ், மாஸ்டர் ரோகன்,மாஸ்டர் ஜோஸ்வா, பேபி மானஸ்வி ஆகிய பலருடன் க உன்னிகிருஷ்ணன் என்ற யானையும் இந்த படத்தில் நடிக்கிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment