ரஜினியின் ஆடியோ கேட்டதும் அதிசயம், அற்புதம் நடந்தது: ரசிகரின் டுவீட்
Send us your feedback to audioarticles@vaarta.com
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் ரசிகர் ஒருவர் மும்பை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவருக்கு கொரோனா பாசிட்டிவ் மற்றும் சிறுநீரக நோய்கள் இருந்ததால் அவர் நலமுடன் வீடு திரும்பவே முடியாது என்ற அச்சத்தில் இருந்தார்
இதனை அடுத்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் ரஜினிக்கு ஒரு ட்வீட் ஒன்றை பதிவு செய்திருந்தார் அதில் அவர் கூறியிருந்ததாவது: தலைவா என் இறுதி ஆசை. 2021 தேர்தலில் வெற்றி பெற்று தமிழக மக்களுக்கு மிகச்சிறந்த தலைவனாகவும், தந்தை மற்றும் ஆன்மீக குருவாகவும் வீர நடைபோட்டு அடித்தட்டு மக்களின் தனிநபர் வருமானம் 25 ஆயிரம் என்ற நிலை உருவாக்கி கொடு. உன்னை அரியணையில் ஏற்ற பாடுபடாமல் போகிறேனே என்ற ஒரே வருத்தம்
இதனை அறிந்த ரஜினிகாந்த் ஆடியோ ஒன்றை தனது ரசிகருக்கு அனுப்பி விட்டார். நீங்கள் நிச்சயம் நலமுடன் வீடு திரும்புவீர்கள் என்றும் தைரியமாக இருங்கள் என்றும் உங்களுக்காக நான் பிரார்த்தனை செய்கிறேன் என்றும் நீங்கள் வீடு திரும்பியதும் என்னை குடும்பத்துடன் வந்து சந்தியுங்கள் என்றும் உங்களை பார்க்க நான் மிகவும் ஆர்வமாக இருக்கிறேன் என்றும் கூறினார்
ரஜினிகாந்தின் இந்த ஆடியோவை கேட்ட அந்த ரசிகர் தற்போது மீண்டும் ஒரு டுவிட்டை பதிவு செய்துள்ளார். அதில் அவர் கூறியதாவது: ஆசிர்வாதம் கிடைத்தது, அதிசயம் நடந்தது அற்புதம் நிகழ்ந்தது. கொரோனா நெகடிவ் வந்தது. தலைவர் காவலர்களின் பிரார்த்தனையால் எனது கிட்னியும் சரி ஆகி மீண்டும் பழைய நிலைக்கு வருவேன். உங்கள் பிரார்த்தனைக்கு நன்றி’ என்று தெரிவித்துள்ளார்.
ரஜினியின் ஆடியோவை கேட்ட அடுத்த சில மணி நேரங்களிலேயே அவருக்கு கொரோனா நெகட்டிவ் ரிசல்ட் வந்ததாக பரவி வரும் செய்தி தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
@rajinikanth ஆசிர்வாதம் கிடைத்தது, அதிசயம் நடந்தது அற்புதம் நிகழ்ந்தது. கொரோனா நெகடிவ் வந்தது. தலைவர் காவலர்களின் பிரார்த்தனையால் எனது கிட்னி யும் சரி ஆகி மீண்டும் பழைய நிலைக்கு வருவேன். உங்கள் பிரார்த்தனைக்கு நன்றி ??. @mayavarathaan @imravee ???? pic.twitter.com/G9iYKBxKgZ
— Darshan (@Darshan47001815) September 17, 2020
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments