இந்தியாவில் முதல்முறையாக பயோமெட்ரிக் சிஸ்டம்: ஐதராபாத் விமான நிலையத்தில் தொடக்கம்
Send us your feedback to audioarticles@vaarta.com
ஒருகாலத்தில் விமானத்தில் பயணம் செய்ய வேண்டுமானால் விமானம் கிளம்புவதற்கு ஒருசில மணி நேரங்களுக்கு முன்பே விமான நிலையம் சென்று உடமைக்கு அளிக்கப்படும் பாதுகாப்பு முத்திரை மற்றும் போர்டிங் பாஸ் பெற வேண்டும். இதற்கு நீண்ட வரிசையில் நிற்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் சமீபத்தில் ஒருசில குறிப்பிட்ட விமான நிலையங்களில் பயணிகளின் உடமைகளுக்கு ‘பேக்கஜே் டேக்’ மாட்டுவதை ரத்து செய்யப்பட்டது.
இந்த நிலையில் போர்டிங் பாஸ் முறைக்கும் தற்போது பயோமெட்ரிக் முறையிலான “எக்ஸ்பிரஸ்-செக்-இன்” சிஸ்டத்தை அமல்படுத்த இந்திய விமானத்துறை முடிவு செய்துள்ளது. இதுகுறித்து மத்திய தொழில் பாதுகாப்பு படையின் இயக்குநர் ஜெனரல் ஒ.பி.சிங் அவர்கள் கூறியதாவது: நாட்டின் 59 விமான நிலையங்களிலும் போர்டிங் கார்டு இல்லாமல் விமான பயணம் செய்வதற்கான புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்துவது பற்றி ஆலோசிக்கப்பட்டு வருகிறது. எதிர்காலத்தில் பிற விமான நிலையங்களும் ஒரே குடையின்கீழ் கொண்டு வரப்பட்டு ஒரே மாதிரியான செயல்பாட்டுக்கு தயார் செய்யப்படும்' என்று கூறினார்.
மேலும் தற்போது ஐதராபாத் விமான நிலையத்தில் பயணிகளுக்கான ‘எக்ஸ்பிரஸ்-செக்-இன் சிஸ்டம் என்ற புதிய நடைமுறை தொடங்கப்பட்டுள்ளது. நாட்டிலேயே முதல்முறையாக ஐதராபாத் விமான நிலையத்தில் பயோமெட்ரிக் முறை பயன்படுத்தப்படுகிறது. இந்த தொழில்நுட்ப நடைமுறையின் வெற்றியை பொருத்து அனைத்து விமான நிலையங்களுக்கும் இந்த தொழில்நுட்பம் விரிவுபடுத்தப்படும்
ஐதராபாத் விமான நிலையத்தில் இந்த பயோமெட்ரிக் சிஸ்டத்தின்படி உள்நாட்டு பயணிகளுக்கான போர்டிங் அச்சிட்ட பின் சுயசேவை பகுதியிலிருந்து வெளிப்புற டெர்மினல் கட்டிடத்தின் புறப்பாடு பகுதிக்கு வரலாம். பின் அங்கிருந்து நேராக எக்ஸ்பிரஸ்-செக்யூரிட்டி செக் பகுதியிலுள்ள வரிசைக்கு வந்து நிற்கலாம். அதுவும், செக் பகுதிக்கு போகாமலேயே புறப்பாடு பகுதிக்கு வந்துவிடலாம் என்பது இந்த நடைமுறையில் பயணிக்கு உள்ள எளியமுறையாகும்.
எனவே, பயோமெட்ரிக் உதவியுடன் இந்த போர்டிங் பாஸ் இல்லாமல் எளிதான பயணத்தை பயணிகள் துவக்கலாம். மேலும், இத்திட்டம் 10க்கும் மேற்பட்ட விமான நிலையங்களில் இந்த மாத இறுதிக்குள் அல்லது அக்டோபருக்கு முன்பாக செயல்படுத்தப்படும்' என்று ஒ.பி.சிங் அவர்கள் கூறியுள்ளார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout