இந்தியாவில் முதல்முறையாக பயோமெட்ரிக் சிஸ்டம்: ஐதராபாத் விமான நிலையத்தில் தொடக்கம்

  • IndiaGlitz, [Thursday,September 21 2017]

ஒருகாலத்தில் விமானத்தில் பயணம் செய்ய வேண்டுமானால் விமானம் கிளம்புவதற்கு ஒருசில மணி நேரங்களுக்கு முன்பே விமான நிலையம் சென்று உடமைக்கு அளிக்கப்படும் பாதுகாப்பு முத்திரை மற்றும் போர்டிங் பாஸ் பெற வேண்டும். இதற்கு நீண்ட வரிசையில் நிற்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் சமீபத்தில் ஒருசில குறிப்பிட்ட விமான நிலையங்களில் பயணிகளின் உடமைகளுக்கு ‘பேக்கஜே் டேக்’ மாட்டுவதை ரத்து செய்யப்பட்டது. 

இந்த நிலையில் போர்டிங் பாஸ் முறைக்கும் தற்போது பயோமெட்ரிக் முறையிலான “எக்ஸ்பிரஸ்-செக்-இன்” சிஸ்டத்தை அமல்படுத்த இந்திய விமானத்துறை முடிவு செய்துள்ளது. இதுகுறித்து மத்திய தொழில் பாதுகாப்பு படையின் இயக்குநர் ஜெனரல் ஒ.பி.சிங் அவர்கள் கூறியதாவது: நாட்டின் 59 விமான நிலையங்களிலும் போர்டிங் கார்டு இல்லாமல் விமான பயணம் செய்வதற்கான புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்துவது பற்றி ஆலோசிக்கப்பட்டு வருகிறது. எதிர்காலத்தில் பிற விமான நிலையங்களும் ஒரே குடையின்கீழ் கொண்டு வரப்பட்டு ஒரே மாதிரியான செயல்பாட்டுக்கு தயார் செய்யப்படும்' என்று கூறினார்.

மேலும் தற்போது ஐதராபாத் விமான நிலையத்தில் பயணிகளுக்கான ‘எக்ஸ்பிரஸ்-செக்-இன் சிஸ்டம் என்ற புதிய நடைமுறை தொடங்கப்பட்டுள்ளது. நாட்டிலேயே முதல்முறையாக ஐதராபாத் விமான நிலையத்தில் பயோமெட்ரிக் முறை பயன்படுத்தப்படுகிறது. இந்த தொழில்நுட்ப நடைமுறையின் வெற்றியை பொருத்து அனைத்து விமான நிலையங்களுக்கும் இந்த தொழில்நுட்பம் விரிவுபடுத்தப்படும்

ஐதராபாத் விமான நிலையத்தில் இந்த பயோமெட்ரிக் சிஸ்டத்தின்படி உள்நாட்டு பயணிகளுக்கான போர்டிங் அச்சிட்ட பின் சுயசேவை பகுதியிலிருந்து வெளிப்புற டெர்மினல் கட்டிடத்தின் புறப்பாடு பகுதிக்கு வரலாம். பின் அங்கிருந்து நேராக எக்ஸ்பிரஸ்-செக்யூரிட்டி செக் பகுதியிலுள்ள வரிசைக்கு வந்து நிற்கலாம். அதுவும், செக் பகுதிக்கு போகாமலேயே புறப்பாடு பகுதிக்கு வந்துவிடலாம் என்பது இந்த நடைமுறையில் பயணிக்கு உள்ள எளியமுறையாகும். 

எனவே, பயோமெட்ரிக் உதவியுடன் இந்த போர்டிங் பாஸ் இல்லாமல் எளிதான பயணத்தை பயணிகள் துவக்கலாம். மேலும், இத்திட்டம் 10க்கும் மேற்பட்ட விமான நிலையங்களில் இந்த மாத இறுதிக்குள் அல்லது அக்டோபருக்கு முன்பாக செயல்படுத்தப்படும்' என்று ஒ.பி.சிங் அவர்கள் கூறியுள்ளார்.

More News

பி.எஸ்.என்.எல். நிறுவனத்தின் அதிரடி சலுகை: தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் அதிர்ச்சி

இந்திய தொலைத்தொடர்பு துறையில் ரிலையன்ஸ் நிறுவனத்தின் ஜியோ சமீபத்தில் புரட்சியை ஏற்படுத்தியது. ரூ.309க்கு தினசரி 1GB டேட்டா மற்றும் எண்ணிலடங்கா இலவச அழைப்புகள் என சலுகை

வேலைநிறுத்தம் செய்த ஆசிரியர்களுக்கு 10 நாள் சம்பளம் கட்: பள்ளிக்கல்வித்துறை அதிரடி

சமீபத்தில் ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் செய்த வேலை நிறுத்ததம் காரணமாக தமிழகத்தில் உள்ள பெரும்பாலான பள்ளிகள் மற்றும் அரசு அலுவலகங்கள் சரியாக இயங்கவில்லை

இயக்குனர் அட்லிக்கு மெர்சலான பிறந்த நாள் வாழ்த்துக்கள்

பிரமாண்ட இயக்குனர் ஷங்கரின் உதவியாளர்களில் ஒருவரும் குறுகிய காலத்தில் முன்னணி இயக்குனர்கள் பட்டியலில் இடம்பெற்றவரும் குறிப்பாக இயக்கிய

சித்தார்த்-ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் படத்தின் டைட்டில்?

விஜய் ஆண்டனி நடித்த சூப்பர் ஹிட் படமான 'பிச்சைக்காரன்' இயக்குனர் சசி இயக்கவுள்ள அடுத்த படத்தில் சித்தார்த் மற்றும் ஜி.வி.பிரகாஷ் ஆகிய இரண்டு நாயகர்கள் நடிக்கவுள்ளதாக வெளிவந்த செய்தி ஏற்கனவே அறிந்ததே

கமல்ஹாசன் சந்திக்கும் இரண்டாவது முதல்வர்

கடந்த சில நாட்களாக அரசியல் கருத்துக்களை தொடர்ந்து தனது சமூக வலைத்தளத்தில் கூறி வரும் கமல்ஹாசனை கவனித்து வருபவர்கள் அவர் அரசியலில் மிக விரைவில் குதிப்பார் என்றே கணித்துள்ளனர்.