சினிமாவை மட்டுமின்றி கிரிக்கெட் ரசிகர்களுக்கும் அதிர்ச்சி கொடுத்த ஜிஎஸ்டி
Send us your feedback to audioarticles@vaarta.com
மத்திய அரசு கடந்த ஜூலை மாதம் 1ஆம் தேதி முதல் நாடு முழுவதும் ஒரே வரி என்ற ஜிஎஸ்டி வரியை நடைமுறைப்படுத்தியது. இதனால் நாடு முழுவதும் ஒருசில பொருட்கள் தவிர பல பொருட்களின் விலை ஏறியது. அதுமட்டுமின்றி 100 ரூபாய்க்கு அதிகமான தியேட்டர் கட்டணங்களுக்கு 28% சேவை வரி என்பதால் திரையரங்குகளில் ரூ.158 என டிக்கெட் கட்டணங்கள் உயர்ந்தன. இதனால் சினிமா ரசிகர்கள் அதிகளவில் பாதிக்கப்பட்டனர் என்பது தெரிந்ததே
இந்த நிலையில் ஜிஎஸ்டி காரணமாக சினிமா ரசிகர்கள் மட்டுமின்றி கிரிக்கெட் ரசிகர்களுக்கும் ஒரு அதிர்ச்சி காத்திருக்கின்றது. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் வரும் 17ஆம் தேதி நடைபெறவுள்ள இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா கிரிக்கெட் போட்டிக்கு ஜிஎஸ்டி காரணமாக உயர்த்தப்பட்ட டிக்கெட் கட்டணங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி குறைந்தபட்ச கட்டணமே ரூ.1200 என்பது கிரிக்கெட் ரசிகர்களுக்கு கிடைக்கும் அதிர்ச்சி தகவல். இதனையடுத்து ரூ.2400, ரூ.4800, ரூ.8000, ரூ.12,000 என டிக்கெட் கட்டணங்கள் வானளவு உயர்ந்தப்பட்டுள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Contact at support@indiaglitz.com