சினிமாவை மட்டுமின்றி கிரிக்கெட் ரசிகர்களுக்கும் அதிர்ச்சி கொடுத்த ஜிஎஸ்டி

  • IndiaGlitz, [Thursday,September 07 2017]

மத்திய அரசு கடந்த ஜூலை மாதம் 1ஆம் தேதி முதல் நாடு முழுவதும் ஒரே வரி என்ற ஜிஎஸ்டி வரியை நடைமுறைப்படுத்தியது. இதனால் நாடு முழுவதும் ஒருசில பொருட்கள் தவிர பல பொருட்களின் விலை ஏறியது. அதுமட்டுமின்றி 100 ரூபாய்க்கு அதிகமான தியேட்டர் கட்டணங்களுக்கு 28% சேவை வரி என்பதால் திரையரங்குகளில் ரூ.158 என டிக்கெட் கட்டணங்கள் உயர்ந்தன. இதனால் சினிமா ரசிகர்கள் அதிகளவில் பாதிக்கப்பட்டனர் என்பது தெரிந்ததே

இந்த நிலையில் ஜிஎஸ்டி காரணமாக சினிமா ரசிகர்கள் மட்டுமின்றி கிரிக்கெட் ரசிகர்களுக்கும் ஒரு அதிர்ச்சி காத்திருக்கின்றது. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் வரும் 17ஆம் தேதி நடைபெறவுள்ள இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா கிரிக்கெட் போட்டிக்கு ஜிஎஸ்டி காரணமாக உயர்த்தப்பட்ட டிக்கெட் கட்டணங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி குறைந்தபட்ச கட்டணமே ரூ.1200 என்பது கிரிக்கெட் ரசிகர்களுக்கு கிடைக்கும் அதிர்ச்சி தகவல். இதனையடுத்து ரூ.2400, ரூ.4800, ரூ.8000, ரூ.12,000 என டிக்கெட் கட்டணங்கள் வானளவு உயர்ந்தப்பட்டுள்ளது. 
 

More News

மணிரத்னம் இயக்கும் அடுத்த படத்தில் ஜோதிகா

ஜோதிகா நடித்துள்ள 'மகளிர் மட்டும்' திரைப்படம் வரும் 15ஆம் தேதி வெளியாகவுள்ளது...

சுசீந்திரன் இயக்கும் அடுத்த படத்தின் தலைப்பு

பிரபல இயக்குனர் சுசீந்திரன் தற்போது 'நெஞ்சில் துணிவிருந்தால்' என்ற படத்தை இயக்கி வருகிறார் என்பதும்...

ஆசிரியர் ஸ்டிரைக் எதிரொலி: மாணவர்களுக்கு பாடம் எடுத்த சேலம் பெண் கலெக்டர்

சமீபத்தில் சேலம் மாவட்டத்தின் முதல் பெண் கலெக்டராக பதவியேற்ற ரோகிணி அவர்கள் மாற்றுத்திறனாளிகளிடம் கனிவுடன் நடந்து கொண்டதால் பெரும் பாராட்டுக்களை பெற்றார் .

11 ஆண்டுகளில் இடிந்து விழுந்த கோவை சோமனூர் பேருந்து நிலையம். அதிர்ச்சியில் பொதுமக்கள்

கோவை சோமனூர் பேருந்து நிலையத்தின் மேற்கூரை இன்று திடீரென இடிந்து விழுந்ததில் பேருந்துக்காக காத்திருந்த பயணிகள் 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

கோடிகள் எனது குறிக்கோள் அல்ல! திரையுலகம்தான் முக்கியம்: விஷால்

பிரபல இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில் விஷால் நடித்துள்ள 'துப்பறிவாளன்' ..