பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் 3வது இடம்.. மாயா போட்ட அதிருப்தி பதிவு..!

  • IndiaGlitz, [Monday,January 15 2024]

பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி நேற்று முடிவடைந்த நிலையில் நேற்றைய கிராண்ட் ஃபினாலே நிகழ்ச்சியில் அர்ச்சனா டைட்டில் வின்னராக அறிவிக்கப்பட்டார். இதையடுத்து அவருக்கு கமல்ஹாசன் உட்பட அனைவரும் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

முதல் ரன்னர் அப் என்ற இடத்தில் மணி இருந்தார் என்பதும் இரண்டாவது ரன்னர் அப் என்ற இடத்தில் மாயா இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் தான் கண்டிப்பாக டைட்டில் பட்டம் வெல்வோம் என்று நம்பிக்கையுடன் இருந்த மாயா மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டது அவருக்கு அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. இந்த இடத்திற்கு வந்ததே தனக்கு பெருமை தான் என்றும், நான் வெற்றி பெற்றுவிட்டேன் என்றும் பிக்பாஸ் மேடையில் மாயா தெரிவித்திருந்தாலும் தனது சமூக வலைத்தளத்தில் அவர் அதிருப்தியை மறைமுகமாக தெரிவித்துள்ளார்,.

மாயா தனது இன்ஸ்டாவில், ‘கையில் என்ன கொண்டு வந்தோம், கொண்டு செல்ல’ என்ற பதிவு செய்துள்ளார். மேலும் அக்சயா, பூர்ணிமா, ஐஷு உடன் இருக்கும் புகைப்படத்தை பதிவு செய்து உள்ளார். மேலும் தனக்கு இந்த நிகழ்ச்சியில் ஆதரவு அளித்த அனைவருக்கும் தனது நன்றி என்றும் மாயா குறிப்பிட்டுள்ளார்