'கோல்டு' படத்தை அடுத்து நயன்தாராவின் அடுத்த படம்.. ரன்னிங் டைம் இவ்வளவு தானா?

  • IndiaGlitz, [Wednesday,November 30 2022]

லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா நடிப்பில் பிரபல மலையாள இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் உருவான ‘கோல்டு’ திரைப்படம் வரும் வெள்ளியன்று அதாவது டிசம்பர் 2ஆம் தேதி வெளியாக உள்ளது. இந்த படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டு இருப்பதாகவும் இந்த படம் நிச்சயம் வெற்றிபெறும் என்றும் கூறப்பட்டு வருகிறது.

இந்நிலையில் நயன்தாரா நடிப்பில் உருவாகியுள்ள மற்றொரு திரைப்படமான ‘கனெக்ட்’ என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் இறுதிக் கட்டத்தில் இருந்தது என்பதை ஏற்கனவே பார்த்தோம்.

இந்த நிலையில் ‘கனெக்ட்’ திரைப்படம் டிசம்பர் 22ஆம் தேதி வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது இந்த படத்தின் சென்சார் சான்றிதழ் மற்றும் ரன்னிங் டைம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது

‘கனெக்ட்’ படத்தை பார்த்த சென்சார் அதிகாரிகள் இந்த படத்திற்கு ‘யூஏ’ சான்றிதழ் அளித்துள்ளனர். இதனை அடுத்து இந்த படம் டிசம்பர் 22ஆம் தேதி திட்டமிட்டபடி ரிலீஸாவது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்த படத்தின் ரன்னிங் டைம் வெறும் 99 நிமிடங்கள் மட்டுமே என அறிவிக்கப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட ஒன்றரை மணி நேரமே உள்ள இந்த படம் முழுக்க முழுக்க த்ரில்லாக என்று எதிர்பார்க்கப்படுகிறது.



நயன்தாராவுடன் பிரபல பாலிவுட் நடிகர் அனுபம்கெர், சத்யராஜ் உள்பட பலர் நடித்த இந்தப் படத்தை ரெளடி பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த படத்தை நயன்தாரா நடித்த சூப்பர் ஹிட் வெற்றி படமான ’மாயா’ படத்தை இயக்கிய அஸ்வின் சரவணன் இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.