'கோட்' படத்தை அடுத்து இன்னொரு படத்தில் AI மூலம் கேப்டன் விஜயகாந்த்.. இயக்குனர் தகவல்..!

  • IndiaGlitz, [Tuesday,December 17 2024]

சமீபத்தில் வெளியான விஜய் நடித்த ’கோட்’ திரைப்படத்தில் கேப்டன் விஜயகாந்த் AI மூலம் சில நிமிடங்கள் தோன்றிய நிலையில், இன்னொரு திரைப்படத்திலும் AI மூலம் கேப்டன் விஜயகாந்த் தோன்ற இருப்பதாக இயக்குனர் அன்பு என்பவர் தெரிவித்துள்ளார்.

கேப்டன் விஜயகாந்த் மகன் சண்முகபாண்டியன் ஹீரோவாக நடிக்கும் படைத்தலைவன் என்ற படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், இந்த படத்தில் தான் கேப்டன் விஜயகாந்த் AI மூலம் சிறப்பு தோற்றத்தில் தோன்ற இருப்பதாகவும், அவரது கேரக்டர் நிச்சயம் ரசிகர்கள் ஆச்சரியப்படத்தக்க வகையில் இருக்கும் என்றும் இயக்குனர் அன்பு தெரிவித்துள்ளார்.

மேலும், சமீபத்தில் வெளியான ’லப்பர் பந்து’ திரைப்படத்தில் விஜயகாந்த் நடித்த பொன்மனச் செல்வன் என்ற படத்தில் இடம்பெற்ற நீ பொட்டு வச்ச என்ற பாடல் மிகப்பெரிய ஹிட் ஆனது என்பதும், அதன் பின்னர்தான் இந்த பாடலை பலரும் தேடி பார்த்து யூடியூபில் வீடியோ பார்த்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், இந்த பாடலை படைத்தலைவன் படத்திலும் வைத்திருப்பதாக இயக்குனர் அன்பு தெரிவித்தார். ஆனால் அதே நேரத்தில் லப்பர் பந்து திரைப்படத்திற்கு முன்பே நாங்கள் இந்த பாடலை படத்தில் வைத்து விட்டோம், ஆனால் லப்பர் பந்து எங்கள் படத்திற்கு முன்பே ரிலீஸ் ஆகிவிட்டது என்று தெரிவித்தார். கேப்டனுக்கும் சண்முக பாண்டியனுக்கும் உள்ள உறவை காட்டுவதற்கு இந்த பாடல் சரியாக இருக்கும் என்று நினைத்துதான் இந்த பாடலை நாங்கள் வைத்துள்ளோம் என்றும் அவர் கூறினார்.

மேலும், இந்த படத்தில் கஸ்தூரிராஜா ஒரு முக்கிய கேரக்டரில் நடித்திருக்கிறார் என்றும், இந்த படத்தின் கதையை கேட்டதும் அவர் உடனே படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டார் என்றும் அவருக்கு எங்கள் நன்றி என்றும் இயக்குனர் அன்பு தெரிவித்துள்ளார்.

More News

பாலிவுட் மாஸ் நடிகர் படத்திற்கு இசையமைக்கும் சந்தோஷ் நாராயணன்.. குவியும் வாழ்த்துக்கள்..!

பாலிவுட் திரையுலகின் மாஸ் நடிகர் நடிக்கும் படத்தில் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் பணிபுரிய இருப்பதாக வெளிவந்திருக்கும் தகவல் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

ரஜினி பெயரை மாற்றியவர்.. கலைஞர் வீட்டு கருவாட்டு வாசம்: நடிகர் செந்தாமரை மகள் பேட்டி..!

பிரபல குணச்சித்திர நடிகர் செந்தாமரையின் மகள் ராஜலட்சுமி நமக்கு அளித்த பிரத்யேக பேட்டியில், பல சுவாரஸ்ய தகவல்களை பகிர்ந்துள்ளார்.

2ஆம் பாகம் ஆகிறது விஷாலின் சூப்பர்ஹிட் படம்.. மீண்டும் இணையும் வெற்றி கூட்டணி..!

விஷால் நடிப்பில் சூப்பர் ஹிட் ஆகி 100 கோடி ரூபாய் வசூல் செய்த படத்தின் இரண்டாம் பாகம் விரைவில் உருவாக இருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளன.

சூரிக்கு ஜோடியாகும் 'பொன்னியின் செல்வன்' நடிகை.. டைட்டில் அறிவிப்பு..!

நடிகர் சூரி நடிக்கும் அடுத்த திரைப்படத்தில் ஜோடியாக, 'பொன்னியின் செல்வன்' திரைப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்த நடிகை இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

'சூர்யா 45' படத்தில் இணைந்த 3வது நாயகி.. ஆர்ஜே பாலாஜியின் திட்டம் தான் என்ன?

சூர்யா நடிப்பில், ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் உருவாகி வரும் சூர்யாவின் 45-வது திரைப்படத்தில் நாயகியாக த்ரிஷா நடிக்க இருப்பதாக கடந்த சில நாட்களுக்கு முன் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.