'கோட்' படத்தை அடுத்து இன்னொரு படத்தில் AI மூலம் கேப்டன் விஜயகாந்த்.. இயக்குனர் தகவல்..!
Send us your feedback to audioarticles@vaarta.com
சமீபத்தில் வெளியான விஜய் நடித்த ’கோட்’ திரைப்படத்தில் கேப்டன் விஜயகாந்த் AI மூலம் சில நிமிடங்கள் தோன்றிய நிலையில், இன்னொரு திரைப்படத்திலும் AI மூலம் கேப்டன் விஜயகாந்த் தோன்ற இருப்பதாக இயக்குனர் அன்பு என்பவர் தெரிவித்துள்ளார்.
கேப்டன் விஜயகாந்த் மகன் சண்முகபாண்டியன் ஹீரோவாக நடிக்கும் "படைத்தலைவன்" என்ற படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், இந்த படத்தில் தான் கேப்டன் விஜயகாந்த் AI மூலம் சிறப்பு தோற்றத்தில் தோன்ற இருப்பதாகவும், அவரது கேரக்டர் நிச்சயம் ரசிகர்கள் ஆச்சரியப்படத்தக்க வகையில் இருக்கும் என்றும் இயக்குனர் அன்பு தெரிவித்துள்ளார்.
மேலும், சமீபத்தில் வெளியான ’லப்பர் பந்து’ திரைப்படத்தில் விஜயகாந்த் நடித்த "பொன்மனச் செல்வன்" என்ற படத்தில் இடம்பெற்ற "நீ பொட்டு வச்ச" என்ற பாடல் மிகப்பெரிய ஹிட் ஆனது என்பதும், அதன் பின்னர்தான் இந்த பாடலை பலரும் தேடி பார்த்து யூடியூபில் வீடியோ பார்த்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், இந்த பாடலை "படைத்தலைவன்" படத்திலும் வைத்திருப்பதாக இயக்குனர் அன்பு தெரிவித்தார். ஆனால் அதே நேரத்தில் "லப்பர் பந்து" திரைப்படத்திற்கு முன்பே நாங்கள் இந்த பாடலை படத்தில் வைத்து விட்டோம், ஆனால் "லப்பர் பந்து" எங்கள் படத்திற்கு முன்பே ரிலீஸ் ஆகிவிட்டது என்று தெரிவித்தார். கேப்டனுக்கும் சண்முக பாண்டியனுக்கும் உள்ள உறவை காட்டுவதற்கு இந்த பாடல் சரியாக இருக்கும் என்று நினைத்துதான் இந்த பாடலை நாங்கள் வைத்துள்ளோம் என்றும் அவர் கூறினார்.
மேலும், இந்த படத்தில் கஸ்தூரிராஜா ஒரு முக்கிய கேரக்டரில் நடித்திருக்கிறார் என்றும், இந்த படத்தின் கதையை கேட்டதும் அவர் உடனே படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டார் என்றும் அவருக்கு எங்கள் நன்றி என்றும் இயக்குனர் அன்பு தெரிவித்துள்ளார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout