'கோட்' படத்தை அடுத்து இன்னொரு படத்திலும் ஏஐ விஜயகாந்த்.. இன்று முதல் பணிகள் ஆரம்பம்..!

  • IndiaGlitz, [Saturday,June 22 2024]

தளபதி விஜய் நடித்துள்ள ’கோட்’ திரைப்படத்தில் கேப்டன் விஜயகாந்த் ஒரு சில காட்சிகளில் வருகிறார் என்றும் ஏஐ தொழில்நுட்பம் மூலம் இந்த காட்சிகள் உருவாக்கப்பட்டு உள்ளதாகவும் செய்திகள் வெளியாகின. இந்த நிலையில் ’கோட்’ படத்தை அடுத்து இன்னொரு படத்திலும் விஜயகாந்த் ஏஐ காட்சிகள் இடம் பெற போவதாகவும் அந்த பணிகள் இன்று முதல் தொடங்கி இருப்பதாகவும் தெரிகிறது.

தளபதி விஜய் நடித்துள்ள ’கோட்’ திரைப்படத்தில் விஜயகாந்த் காட்சிகள் ஒரு சில நிமிடம் இருப்பதாகவும், அவரது கேரக்டர் படத்தின் திருப்புமுனையை ஏற்படுத்தும் கேரக்டர் என்றும் கூறப்பட்டது. மேலும் விஜயகாந்த் மனைவி பிரேமலதா இந்த காட்சிகளை பார்த்து ஒப்புதல் கொடுத்துள்ளதாகவும் செய்திகள் வெளியாகின.

இந்த நிலையில் ’கோட்’ படத்தை அடுத்து விஜயகாந்த் மகன் சண்முக பாண்டியன் நடித்து வரும் 'படைத்தலைவன்’ என்ற படத்திலும் விஜயகாந்தை பயன்படுத்த படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாகவும் அதற்கான பணிகள் இன்று முதல் தொடங்கியுள்ளதாகவும் தெரிகிறது.

இந்த படத்தில் சிறப்பு தோற்றத்தில் ஒரு கேரக்டர் இருந்ததை அடுத்து அந்த கேரக்டரில் ராகவா லாரன்ஸ் நடிப்பதாக செய்திகள் வெளியானது. தற்போது அந்த கேரக்டரில் ஏஐ தொழில்நுட்பம் மூலம் விஜயகாந்தை நடிக்க வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் இந்த படம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஏற்கனவே சண்முக பாண்டியன் நடித்த முதல் திரைப்படமான ’சகாப்தம்’ படத்தில் விஜயகாந்த் சிறப்புத் தோற்றத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

More News

ரேஸ் காரில் மாஸ் காட்டும் அஜித்.. வேற லெவல் வீடியோ..!

'விடாமுயற்சி'  படத்தின் படப்பிடிப்பிற்காக அஜித், அஜர்பைஜான் சென்று இருக்கும் நிலையில் அவர் படப்பிடிப்பில் கலந்து கொள்கிறாரோ இல்லையோ, கார் ஓட்டுவதிலும் கார் ரேசில் கலந்து கொள்வதிலும்

சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ.. பவதாரிணி குரலில் என்ன ஒரு மெலடி.. 'கோட்' பாடல் ரிலீஸ்..!

தளபதி விஜய் நடித்த 'கோட்' படத்தின் இரண்டாவது சிங்கிள் பாடல் இன்று வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் சற்றுமுன் இந்த பாடல் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.

👑உங்கள் நட்சத்திர குண பலன்கள் எப்படி இருக்கும் !

ஜோதிடம் மற்றும் பரிகாரங்கள் குறித்த தகவல்களை வழங்கும் யூடியூப் சேனல் ஆன்மீகக்ளிட்ஸ், "நட்சத்திர பலன்கள்: உங்கள் குண நலன்கள், வாழ்க்கை ஏற்ற தாழ்வுகள்" என்ற தலைப்பில் புதிய வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது.

பாடகி சைந்தவிக்கு வாய்ப்பு கொடுத்த பிரபல இசையமைப்பாளர்.. வைரல் புகைப்படங்கள்..!

தமிழ் திரையுலகின் முன்னணி பாடகிகளில் ஒருவரான சைந்தவிக்கு பிரபல இசையமைப்பாளர் தான் இசையமைக்கும் படத்தில் ஒரு பாடலை பாட வாய்ப்பு கொடுத்துள்ளார். இந்த பாடல் ஒலிப்பதிவு செய்யும்போது

கர்வம் இருக்கணும், கடிகாரத்தை பார்க்க கூடாது: செல்வராகவன் கூறிய பொன்மொழி..!

பிரபல இயக்குனர் செல்வராகவன் அவ்வப்போது தனது சமூக வலைத்தளத்தில் சில பொன்மொழிகளையும் அறிவுரைகளையும் மக்களுக்கு தெரிவித்து வருவார்.