close
Choose your channels

கிளிம்ப்ஸ் வீடியோவை அடுத்து டீசர்.. 'கோட்' படம் குறித்த மாஸ் தகவல்..!

Thursday, June 27, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தளபதி விஜய் நடித்த ‘கோட்’ திரைப்படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ அவரது பிறந்தநாள் விருந்தாக வெளியாகி இணையத்தில் வைரல் ஆன நிலையில் தற்போது இந்த படத்தின் டீசர் தயாராகி விட்டதாக செய்தி வெளியாகியிருப்பது விஜய் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை அளித்துள்ளது.

தளபதி விஜய் நடித்த ‘கோட்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது இறுதி கட்ட தொழில்நுட்ப பணிகள் நடைபெற்று வருவதாகவும் செப்டம்பர் 5ஆம் தேதி இந்த படத்தின் ரிலீஸ் தேதி என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளதை அடுத்து அதற்கு ஒரு வாரத்துக்கு முன்பே படம் முழுமையாக தயாராகிவிடும் என்று செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.

இந்த நிலையில் சமீபத்தில் விஜய்யின் பிறந்த நாளின் போது இந்த படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ வெளியானது என்பதும் ஒரு சில நொடிகள் மட்டுமே இருந்த இந்த வீடியோ இணையத்தில் வைரல் ஆனது என்பதும் விஜய் ரசிகர்கள் இந்த வீடியோவை கொண்டாடினார் என்பதையும் பார்த்தோம்.

இந்த நிலையில் அடுத்த கட்டமாக ‘கோட்’ படத்தின் டீசர் ரிலீஸ் செய்ய ஏற்பாடுகள் நடந்து கொண்டிருப்பதாக கூறப்படும் நிலையில் இந்த டீசர் குறித்த சென்சார் தகவல்கள் குறித்து தற்போது வெளிவந்து கொண்டிருக்கின்றன. இந்த டீசர் நேற்று சென்சார் செய்யப்பட்டதாகவும். 49 வினாடிகள் ரன்னிங் டைம் கொண்டதாக இந்த டீசர் இருப்பதாகவும் சென்சார் தகவல்கள் குறித்த புகைப்படங்களிலிருந்து தெரிய வருகிறது. இதனை அடுத்து மிக விரைவில் ‘கோட்’ படத்தின் டீசர் வெளியாகும் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

விஜய், மீனாட்சி சவுத்ரி, பிரசாந்த், பிரபுதேவா, அஜ்மல், மோகன், ஜெயராம், சினேகா, லைலா, வைபவ், பிரேம்ஜி, யுகேந்திரன், பார்வதி நாயர், விடிவி கணேஷ், யோகி பாபு உட்பட பலர் நடித்துள்ள இந்த படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் பிரமாண்டமாக தயாரித்துள்ளது. யுவன் சங்கர் ராஜா இசையில் சித்தார்த் நுனி ஒளிப்பதிவில் வெங்கட்ராஜன் படத்தொகுப்பில் இந்த படம் உருவாகியுள்ளது.

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.