கிளிம்ப்ஸ் வீடியோவை அடுத்து டீசர்.. 'கோட்' படம் குறித்த மாஸ் தகவல்..!

  • IndiaGlitz, [Thursday,June 27 2024]

தளபதி விஜய் நடித்த ‘கோட்’ திரைப்படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ அவரது பிறந்தநாள் விருந்தாக வெளியாகி இணையத்தில் வைரல் ஆன நிலையில் தற்போது இந்த படத்தின் டீசர் தயாராகி விட்டதாக செய்தி வெளியாகியிருப்பது விஜய் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை அளித்துள்ளது.

தளபதி விஜய் நடித்த ‘கோட்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது இறுதி கட்ட தொழில்நுட்ப பணிகள் நடைபெற்று வருவதாகவும் செப்டம்பர் 5ஆம் தேதி இந்த படத்தின் ரிலீஸ் தேதி என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளதை அடுத்து அதற்கு ஒரு வாரத்துக்கு முன்பே படம் முழுமையாக தயாராகிவிடும் என்று செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.

இந்த நிலையில் சமீபத்தில் விஜய்யின் பிறந்த நாளின் போது இந்த படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ வெளியானது என்பதும் ஒரு சில நொடிகள் மட்டுமே இருந்த இந்த வீடியோ இணையத்தில் வைரல் ஆனது என்பதும் விஜய் ரசிகர்கள் இந்த வீடியோவை கொண்டாடினார் என்பதையும் பார்த்தோம்.

இந்த நிலையில் அடுத்த கட்டமாக ‘கோட்’ படத்தின் டீசர் ரிலீஸ் செய்ய ஏற்பாடுகள் நடந்து கொண்டிருப்பதாக கூறப்படும் நிலையில் இந்த டீசர் குறித்த சென்சார் தகவல்கள் குறித்து தற்போது வெளிவந்து கொண்டிருக்கின்றன. இந்த டீசர் நேற்று சென்சார் செய்யப்பட்டதாகவும். 49 வினாடிகள் ரன்னிங் டைம் கொண்டதாக இந்த டீசர் இருப்பதாகவும் சென்சார் தகவல்கள் குறித்த புகைப்படங்களிலிருந்து தெரிய வருகிறது. இதனை அடுத்து மிக விரைவில் ‘கோட்’ படத்தின் டீசர் வெளியாகும் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

விஜய், மீனாட்சி சவுத்ரி, பிரசாந்த், பிரபுதேவா, அஜ்மல், மோகன், ஜெயராம், சினேகா, லைலா, வைபவ், பிரேம்ஜி, யுகேந்திரன், பார்வதி நாயர், விடிவி கணேஷ், யோகி பாபு உட்பட பலர் நடித்துள்ள இந்த படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் பிரமாண்டமாக தயாரித்துள்ளது. யுவன் சங்கர் ராஜா இசையில் சித்தார்த் நுனி ஒளிப்பதிவில் வெங்கட்ராஜன் படத்தொகுப்பில் இந்த படம் உருவாகியுள்ளது.

 

More News

2வது திருமணத்திற்கு முன் நடிகை வைத்த பேச்சிலர் பார்ட்டி.. அதுவும் தனி விமானத்தில்..!

ரஜினிகாந்த், விஜய், விக்ரம், தனுஷ், ஆர்யா உட்பட பல முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்த நடிகை விரைவில் இரண்டாவது திருமணம் செய்ய இருக்கும் நிலையில் தனது நண்பர்கள் மற்றும் தோழிகளுக்கு தனி

வேற லெவலில் ரஜினியின் லுக்.. லோகேஷ் கனகராஜ் பகிர்ந்த 'கூலி' புகைப்படம்..!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாக இருக்கும் 'கூலி' படத்தின் ரஜினிகாந்த் லுக் டெஸ்ட் குறித்த புகைப்படத்தை லோகேஷ் கனகராஜ்thal

சிம்புவுக்கு முன்பே வெங்கல் ராவுக்கு உதவிய தமிழ் நடிகை.. எவ்வளவு கொடுத்தார் தெரியுமா?

பிரபல காமெடி நடிகர் வெங்கல் ராவ் உடல் நலக்குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வரும் நிலையில் அவருக்கு சிம்பு ரூபாய் 2 லட்சம் உதவி செய்தார் என்பதை ஏற்கனவே பார்த்தோம்.

என்ன ஆச்சு ரச்சுவுக்கு.. ரம்பாவுக்கு போட்டியாக மாறிய தொடையழகி.. இன்ப அதிர்ச்சி புகைப்படங்கள்..!

சீரியல் நடிகை மற்றும் பிக் பாஸ் போட்டியாளர் ரச்சிதா மகாலட்சுமி சற்றுமுன் தொடையழகு போட்டோஷூட் புகைப்படங்களை பதிவு செய்துள்ள நிலையில் அவருடைய தொடையழகை

திருவண்ணாமலையின் அதிசயங்கள்! யாரும் அறியாத தகவல்கள்! | ஜோதிடர் பாலாறு சுவாமிகள்

திருவண்ணாமலை யின் பெருமை பற்றி நாம் அனைவரும் அறிந்திருந்தாலும், அதன் அதிசயங்கள், ரகசியங்கள் பற்றி இன்னும் எங்களுக்குத் தெரியாத பல விஷயங்கள் இருக்கின்றன.