3 வார இடைவெளியில் மற்றொரு காஜல் அகர்வால் படம் ரிலீஸ்: தேதி அறிவிப்பு..!
Send us your feedback to audioarticles@vaarta.com
காஜல் அகர்வால் நடித்த ’கோஸ்டி’ என்ற திரைப்படம் மார்ச் 17ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது என்பதும் இந்த படம் த்ரில் மற்றும் நகைச்சுவை திரைக்கதை அம்சம் கொண்டது என்பதால் பல ரசிகர்களை கவர்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் காஜல் அகர்வால் நடித்த ’கோஸ்டி’ திரைப்படம் வெளியான மூன்றே வாரத்தில் அவர் நடித்த மற்றொரு திரைப்படம் வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. காஜல் அகர்வால் முக்கிய வேடத்தில் நடித்திருந்த திரைப்படம் ’கருங்காப்பியம்’. அவருடன் ரெஜினா, ஜனனி ஐயர், ரெய்சா விலசன் ஆகிய மூன்று நாயகிகள் இந்த படத்தில் நடித்துள்ளனர். மேலும் இந்த படத்தின் முக்கிய கேரக்டரில் கலையரசன், கருணாகரன் உள்பட பலர் நடித்துள்ளனர்.
கார்த்திகேயன் இயக்கத்தில் உருவான இந்த படம் ரிலீசுக்கு தயாராகி பல மாதங்கள் ஆன நிலையில் தற்போது ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படம் ஏப்ரல் 7ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
’கருங்காப்பியம்’ என்ற புத்தகத்தில் அடுத்து வரும் 100 வருடத்தை கணித்து எழுதி உள்ள நிலையில் அதில் குறிப்பிட்டபடி நடக்கிறதா? என்பது தான் இந்த படத்தின் கதை என்பது குறிப்பிடத்தக்கது. பிரசாத் இசையில், விக்னேஷ் வாசு ஒளிப்பதிவில், விஜய் வேலு குட்டி படத்தொகுப்பில் இந்த படம் உருவாகியுள்ளது.
ஏற்கனவே காஜல் அகர்வால் நடித்து முடித்து நீண்ட காலமாக கிடப்பில் இருக்கும் ’பாரிஸ் பாரிஸ்’ என்ற திரைப்படம் விரைவில் ரிலீஸ் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் அவர் கமல்ஹாசனின் ’இந்தியன் 2’ மற்றும் பாலகிருஷ்ணன் நடிக்கும் தெலுங்கு படம் ஆகிய படங்களில் தற்போது நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments