'கில்லி'யை அடுத்து சொல்லி அடிக்கும் இன்னொரு விஜய் படம்.. ரீரிலீஸ் தேதி அறிவிப்பு..!

  • IndiaGlitz, [Thursday,June 06 2024]

தளபதி விஜய் நடித்த ’கில்லி’ திரைப்படம் சமீபத்தில் ரீரிலீஸ் ஆகி மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில் விஜய்யின் இன்னொரு சூப்பர் ஹிட் படத்தின் ரீரிலீஸ் தேதி அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

விஜய், த்ரிஷா நடிப்பில் தரணி இயக்கத்தில் உருவான ’கில்லி’ திரைப்படம் கடந்த 2004ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில் சமீபத்தில் ரீரிலீஸ் செய்யப்பட்டது என்பதும் இந்த படம் 30 கோடி ரூபாய் வசூல் செய்து சாதனை செய்தது என்பது குறிப்பிடத்தக்கது. புதிதாக ரிலீசாகும் படங்கள் கூட செய்யாத வசூலை ரீரிலீஸ் படம் செய்திருப்பது திரை உலகினருக்கு பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருந்தது.

இந்த நிலையில் ’கில்லி’ வெற்றியை அடுத்து விஜய்யின் இன்னொரு சூப்பர் ஹிட் திரைப்படமான ’துப்பாக்கி’ படத்தின் ரீரிலீஸ் தேதி தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படம் வரும் 21ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ள நிலையில் விஜய் ரசிகர்கள் குஷியாகி உள்ளனர். ’கில்லி’ படத்தை அடுத்து ’துப்பாக்கி’ படமும் சொல்லி அடிக்கும் வெற்றி படமாக இருக்கும் என்று விஜய் ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர்.

விஜய், காஜல் அகர்வால், ஜெயராம் உள்பட பலர் நடிப்பில் உருவான ’துப்பாக்கி’ திரைப்படத்தை ஏஆர் முருகதாஸ் இயக்கி இருந்தார் என்பதும் ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் உருவான இந்த படத்தை கலைப்புலி எஸ் தாணு தயாரித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

ஒவியா படம் உள்பட 3 தமிழ் படங்கள்? இந்த வார ஓடிடி ரிலீஸ் முழு விவரங்கள்..!

ஒவ்வொரு வாரமும் திரையரங்குகளில் புதிய திரைப்படங்கள் ரிலீஸ் ஆகி கொண்டிருக்கும் நிலையில் ஏற்கனவே ரிலீஸ் ஆன திரைப்படங்கள் கிட்டத்தட்ட ஒரே மாதத்தில் ஓடிடியில் ரிலீஸ் ஆகி வருகின்றன

பா ரஞ்சித்தின் கேங்ஸ்டர் படத்தில் மூன்று ஹீரோக்கள்.. டைட்டிலே இவ்வளவு ஆக்ரோஷமா இருக்குதே..!

பா ரஞ்சித் இயக்கிய 'தங்கலான்' திரைப்படம் விரைவில் வெளியாக இருக்கும் நிலையில் அவரது அடுத்த படத்தில் மூன்று ஹீரோக்கள் நடிக்க இருப்பதாகவும் இது ஒரு கேங்ஸ்டர் படமாக உருவாக இருப்பதாகவும் கூறப்படுகிறது.

சரத்குமார் மீது நடிகர் தனுஷின் தாய் வழக்கு.. நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!

நடிகர் தனுஷின் தாய் திடீரென சரத்குமார் மீது வழக்கு தொடர்ந்து உள்ள நிலையில் நீதிமன்றம் இந்த வழக்கில் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன.

பிரதமர் பதவி கொடுத்தாலும் இந்தியா கூட்டணிக்கு செல்ல மாட்டேன்: 2 எம்பிக்கள் வைத்துள்ள பிரபல நடிகர்..!

பிரதமர் பதவி கொடுத்தால் கூட மோடியை விட்டுவிட்டு இந்தியா கூட்டணிக்கு செல்ல மாட்டேன் என இரண்டு எம்பிக்கள் வைத்துள்ள பிரபல நடிகர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

'விடாமுயற்சி' படப்பிடிப்புக்காக அஜர்பைஜான் செல்லும் அஜித்.. இணையும் 2 முன்னணி நடிகைகள்..!

அஜித் தற்போது ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகி வரும் 'குட் பேட் அக்லி' படத்தின் படப்பிடிப்பில் இருக்கும் நிலையில் ஜூன் 7ஆம் தேதியுடன் இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு முடிவடைய இருப்பதாக