15 வயது சிறுமியுடன் 4வது திருமணம். தடுத்து நிறுத்திய 3 முன்னாள் மனைவிகள்
- IndiaGlitz, [Thursday,May 04 2017]
கடந்த சில காலமாக முத்தலாக் முறையில் விவாகரத்து செய்வது குறித்து சர்ச்சைக்குரிய கருத்துக்கள் பரிமாற்றம் செய்யப்பட்டு வருகின்றன. பிரதமர் நரேந்திரமோடியும் இதுகுறித்து தனது கருத்தை தெரிவித்தார். இந்த நிலையில் உபி மாநிலத்தில் ஒருவர் மூன்று மனைவிகளை அடுத்தடுத்து முத்தலாக் முறையில் விவாகரத்து செய்துவிட்டு தற்போது நான்காவதாக 15 வயது சிறுமியை திருமணம் செய்ய முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உபி மாநிலத்தின் பைரேச் என்ற பகுதியை சேர்ந்த 29 வயது தானிஷ் என்பவர் கடந்த 2013ஆம் ஆண்டு திருமணம் செய்து முதல் மனைவியை சில மாதங்களில் விவாகரத்து செய்தார். அதன் பின்னர் 2வது மற்றும் 3வது திருமணம் செய்து அவர்களையும் ஒருசில மாதங்களில் முத்தலாக் மூலம் விவாகரத்து செய்தார். இந்த நிலையில் நான்காவதாக 15 வயது சிறுமியை திருமணம் செய்ய முயற்சித்தார். இந்த தகவல் அறிந்த அவரது மூன்று முன்னாள் மனைவிகள் ஒன்றிணைந்து இந்த திருமணத்தை தடுத்து நிறுத்தினர்.
மூன்று முன்னாள் மனைவிகளும் தானிஷ் தங்களை ஆபாச படம் எடுத்து தவறான வழியில் பயன்படுத்தியதாக பைரேச் காவல்நிலையத்தில் கொடுத்த புகாரின் அடிப்படையில் போலீசார் தானிஷை கைது செய்து அவரிடம் தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.