தளபதி 67: கெளதம் மேனனை அடுத்து வில்லனாகும் இன்னொரு பிரபல இயக்குனர்!

  • IndiaGlitz, [Tuesday,October 25 2022]

தளபதி விஜய் நடித்து வரும் ’வாரிசு’ திரைப்படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிவடையும் நிலையில் உள்ளது என்பதும் இந்த படம் பொங்கல் திருநாளில் வெளியாக உள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் கடந்த சில நாட்களாக தளபதி விஜய் நடிக்க இருக்கும் 67வது திரைப்படம் குறித்த தகவல்கள் வெளியாகி ரசிகர்களை இன்ப அதிர்ச்சிக்கு உள்ளாக்கி வருகிறது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகயிருக்கும் இந்த படம் இப்போதே மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்த படத்தில் ஆக்ஷன் கிங் அர்ஜுன், இயக்குனர் கௌதம் மேனன், சஞ்சய்தத் ஆகியோர் வில்லன்களாக நடிக்க உள்ளதாக கூறப்பட்ட நிலையில் தற்போது இந்த படத்தில் ஒரு வலிமையான வில்லன் வேடத்தில் இயக்குனர் மிஷ்கின் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.

இது குறித்து இயக்குனர் மிஷ்கினிடம் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் விரைவில் இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

ஏற்கனவே இயக்குனர் மிஷ்கின், சிவகார்த்திகேயன் நடித்து வரும் ’மாவீரன்’ திரைப்படத்தில் ஒரு வலிமையான வில்லன் கேரக்டரில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

ஈரோடு மகேஷின் மனைவி சன் டிவி பிரபலமா? வைரலாகும் குடும்ப புகைப்படம்!

விஜய் டிவி பிரபலங்களில் ஒருவரான ஈரோடு மகேஷ் மனைவி  சன் டிவி பிரபலம் என்ற தகவல் ரசிகர்களுக்கு பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

நான் உலகின் மிக அழகிய பெண் இல்லை: திருமண தி்னத்தில் தமிழ் நடிகையின் உணர்ச்சிகரமான பதிவு!

நேற்று திருமணம் செய்து கொண்ட தமிழ் நடிகை ஒருவர் நான் உலகின் அழகிய

மக்களின் இதயங்களை வெல்வோம்: 'பனாரஸ்' நாயகன் ஜையீத் கான் நம்பிக்கை

''இயக்குநர் ஜெயதீர்த்தா எனக்காக அற்புத படைப்பை உருவாக்கி இருக்கிறார். 'பனாரஸ்' படத்தின் மூலம் மக்களின் இதயங்களை வெல்வோம்'' என 'பனாரஸ்' படத்தின் மூலம் கதையின் நாயகனாக

'நம்ம குடும்பத்துக்கு அதெல்லாம் ஒத்து வராதும்மா': 'தி கிரேட் இந்தியன் கிட்சன்' டிரைலர்

 பிரபல நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் முக்கிய கேரக்டரில் நடித்த 'தி கிரேட் இந்தியன் கிட்சன்' என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து விரைவில் ரிலீசாக இருக்கும் நிலையில் தீபாவளி தினத்தில் இந்த படத்தின்

தாத்தாவுடன் தீபாவளி கொண்டாட்டம்: ரஜினி பேரன்களின் மாஸ் புகைப்படங்கள்!

 இந்தியா முழுவதும் நேற்று தீபாவளி பண்டிகை சிறப்பாகக் கொண்டாடப் பட்டது என்பதும் பிரதமர் மோடி உள்பட பல அரசியல்வாதிகளும், ரஜினி, கமல் உள்பட பல திரையுலக பிரபலங்களும் தீபாவளி வாழ்த்துக்களை