4 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் விஜய் படத்துடன் மோதும் நடிகரின் படம்!
Send us your feedback to audioarticles@vaarta.com
நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் விஜய் படத்துடன் மோதிய பிரபல நடிகரின் படம் மீண்டும் அடுத்த ஆண்டு விஜய் படத்துடன் மோத இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளன.
விஜய் நடிப்பில் வம்சி இயக்கத்தில் உருவாகியுள்ள ’வாரிசு’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதும் இந்த படம் அடுத்த ஆண்டு பொங்கல் தினத்தில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது என்பதும் தெரிந்ததே.
இந்த நிலையில் நடிகர் மற்றும் தயாரிப்பாளர் ஆர்கே சுரேஷ் நடித்த ’காடுவெட்டி’ என்ற திரைப்படம் வரும் பொங்கல் தினத்தில் வெளியாக உள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே விஜய்யின் ’சர்க்கார்’ திரைப்படமும் ஆர்கே சுரேஷ் நடித்த ’பில்லா பாண்டி’ என்ற திரைப்படமும் கடந்த 2018ம் ஆண்டு தீபாவளி தினத்தில் மோதியது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் 4 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் விஜய் படத்துடன் ஆர்கே சுரேஷின் படம் மோத உள்ளது.
மேலும் நடிகரும் தயாரிப்பாளருமான ஆர்கே சுரேஷ் தீவிர அஜித் ரசிகர் என்பது குறிப்பிடத்தக்கது. சோலை ஆறுமுகம் இயக்கத்தில் ஆர்கே சுரேஷ், ஆடுகளம் முருகதாஸ், சுப்பிரமணியம் சிவா உள்ளிட்ட பலர் நடித்த இந்த படத்திற்கு சதீக் இசையமைத்துள்ளார்.
#kaduveeti planning to release #Pongal2023 ???????? pic.twitter.com/0rA54KxYYx
— RK SURESH (@studio9_suresh) September 27, 2022
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout